Tamilnadu

News March 11, 2025

மண்ணுக்கு அடியில் முருகன் சிலை கண்டெடுப்பு

image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகின்றது. கோவிலின் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில்,கோவிலின் நான்காம் பிரகாரத்தில், சீரமைப்பு பணிக்காக, கோவில் ஊழியர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, மண்ணுக்கு அடியில் சிலை ஒன்று தென்பட்டுள்ளது. மேலும், ஆழப்படுத்தி பார்க்கும்போது, அது முருகன் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சிலையை கோயிலில் ஒப்படைத்தனர்.

News March 11, 2025

மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் இந்த நேரத்தில் கிரிவலம் சென்று அண்ணாமலையார் அருள் பெறலாம்.

News March 11, 2025

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் ஆய்வில்: மத்திய அரசு

image

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் இருந்து 2024 டிசம்பரில் வந்தன என்றும், தமிழ்நாடு அரசின் இந்த திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்று மாநிலங்களவையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். இன்னும் பரிசீலனையிலேயே உள்ளதால் ரயில் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News March 11, 2025

புதுவையில் போலீஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திவைப்பு

image

புதுவையில் புதிதாக தேர்வாகிய 27வது பேட்ஜ் போலீசாருக்கு, பயிற்சி நிறைவு அணிவகுப்பு, கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று (மா.10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி & உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் நேற்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதால் போலீசாருக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

News March 11, 2025

உருவபொம்மை எரித்த போது வேட்டியில் பற்றியது தீ

image

லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க., – எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போடி, தேவர் சிலை அருகே மத்திய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் , வார்டு தி.மு.க., செயலர் சந்திரசேகரின் வேட்டியில் தீப்பற்றியது. அவர் வேட்டியை அவிழ்த்து போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.

News March 11, 2025

நாமக்கல்லில் தந்தையை கொலை செய்த மகன்

image

நாமக்கல், மோகனூர் அடுத்த அரூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் காராள கவுண்டர் (85). இவரது மகன் முருகேசன் (50) நேற்று தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை காராள கவுண்டரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

News March 11, 2025

கடலூர் பொது சுகாதார ஆய்வகங்கத்தில் வேலைவாய்ப்பு

image

கடலூர் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ‘<>லிங்க்<<>>’ இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களை 11.03.2025 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

News March 11, 2025

வேலூரின் ஸ்பெஷல் உணவு மட்டன் பாயா

image

வேலூர் மட்டன் பாயா என்பது வேளூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு வகையாகும்.இது மட்டன் கால் மற்றும் எலும்புகளை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான குழம்பு ஆகும்.வேலூர் நகரில் பல இடங்களில் கிடைக்கும். குறிப்பாக தெரு ஓர கடைகளில் கிடைக்கும். சப்பாத்தி, இடியப்பம், அல்லது பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடலாம். பாயா உங்களுக்கும் புடிக்கும் என்றால் உங்கள் Foodie நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.

News March 11, 2025

கரூரில் மார்ச் 15ல் தனியார் வேலை வாய்ப்பு

image

கரூர் கலெக்டர் அறிவிப்பு: தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மார்ச்.15ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். கரூர் இளைஞர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிடாதீர்கள். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 11, 2025

பல்லடம் கொலை: 100 வது நாள் ஆகியும் மர்மம்

image

திருப்பூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் 100 நாட்கள் ஆகியும் தற்பொழுது வரை விடை கிடைக்காமல் விசாரணை நீண்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அமலாத்தாள். அவர்களது மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த நவ.29ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து 18 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இது வரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

error: Content is protected !!