Tamilnadu

News November 19, 2024

ராஜபாளையத்தில் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை

image

ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதி சேர்ந்த வெங்கடேஸ்வரி. இவரது மூத்த மகன் அஜய்ராம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தனது தாய் வெங்கடேஸ்வரியிடம் தமிழ் கையேடு வாங்கி தர வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வாங்கி தராமல் தையல் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த மாணவன் அஜய்ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 19, 2024

பண்ருட்டியில் நாளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (நவம்பர் 20-ம் தேதி) ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

News November 19, 2024

திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் வெற்றி தான்: அமைச்சர் பேச்சு

image

திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.என். நேரு இன்று பேசியது, தமிழக முதல்வர் மீதும், இந்த ஆட்சி மீதும் குறை சொல்லி அடுத்து நாங்க தான் என எதிர் கட்சி தலைவர்கள், அதிமுகவினர் நிறைய பேர் பேசுகின்றனர். ஆனால், தமிழக முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். இன்று யார்! யாரோ? நம்மை வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் எதுவுமே வெற்றி தான் என்றார்.

News November 19, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 22ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வெங்கடேசன் எம்.பி கண்டனம்

image

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி முதல் அழகர்மலை வரை பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. கீழடி அகழாய்வுக்கு அனுமதி தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி அளித்துள்ளது. எனவே தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 19, 2024

டைடல் பார்க் அமையும்இடத்தை மாற்ற கோரிக்கை

image

நாகை அருகே செல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் மாவட்ட வளர்ச்சி குழுமத்தினர் விளை நிலங்களில் டைடல் பார்க் அமைவதை கைவிட்டு நகரின் மத்தியில் ஆர்.டி.ஒ. அலுவலகம் அருகே அமைக்க வலியுறுத்தி நேற்று மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

News November 19, 2024

கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்த நிலையில் இரண்டு நாட்களாக பல இடங்களில் மழை இல்லை. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 19, 2024

கைபேசியை தவிர்க்க வேண்டும் – மாநகர காவல்துறை

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களுக்கு தினம்தோறும் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவ.19) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனம் ஓட்டும் போது கைபேசியை தவிர்க்க வேண்டும் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளனர்.

News November 19, 2024

வாகனங்கள் பொது ஏலம்

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 27-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

image

அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், தனது 13 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அவரது மனைவி அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதுகுறித்து சிறுமியிடம் போலீசார் விசாரித்து பின், அவரது தந்தை வெங்கடேசனை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.