India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் மிகப்பெரிய ராட்டினம் டெல்லியில் உள்ளது. அதே போல மும்பையில் ஒரு பிரம்மாண்ட ராட்டினத்தை அமைக்க மும்பை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ராட்டினத்தை கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழி பூங்காவில் நிறுவ கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னிமலை டவுன், ஒன்பதாவது வார்டு பார்க் சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு பின்புறம் காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்தெறிந்தது. இதுகுறித்து உடனடியாக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். மொடக்குறிச்சியில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை ரங்கமலை கணவாய் அருகே திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சேர்ந்த குடும்பம் வெள்ளகோவில் நாட்ராயன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது டயர் வெடித்ததில் கார் இடதுபுறம் இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க் அறிவிப்பு பலகையில் மோதி கீழே உருளாமல் நின்றது. இதனால் யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லை.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் வலுவதுரில் பிரசித்திபெற்ற அக்னிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு 5 திங்கட்கிழமை வந்து நெய் தீபம் ஏற்றி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், குடும்ப பிரச்சனை, மனதளவில் ஏற்படும் பிரச்சனை தீரும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று தென்காசி, கன்னியாகுமரி,தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 செமீ மழை பெய்யக் கூடும்.
தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 993 மாடுகள் களம் இறக்கப்பட்டன. அதில் 46 பேர் காயமடைந்தனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
தூத்துக்குடியில் அனைவருக்கும் பிடித்தமான உணவில் கண்டிப்பாக பொறித்த பரோட்டா வரும். இங்கு வீதிக்கு வீதி பொறித்த பரோட்டா கடை உண்டு. இந்த பரோட்டாவிற்கென தயாரிக்கும் சால்னா அனைவரின் நாவையும் கட்டுப்படுத்தி வைக்கும். 3 வகையான சால்னா, வெங்காயம் தான் பொறித்த பரோட்டாவிற்கு செம்ம காம்பினேசன். சில கடைகளில் கொடுக்கப்படும் பீப் சால்னா அல்டிமேட் தான். *பொறித்த பரோட்டா சாப்பிடாத நண்பருக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.