Tamilnadu

News March 9, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தகவல்

image

முதியோர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத இடர்பாடுகளை போக்கிடவும், உதவிடவும் துரிதமாக உதவிகளை கிடைத்திட காவல்துறை சீனியர் சிட்டிசன் ஹெல்ப் லைன் எண் 14567 என்ற எண்ணை அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

News March 9, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.3.80 என நிர்ணயம் செய்யப்பட்டது. வெயில், தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பண்ணை கொள்முதல் விலை 3.80 ஆகவே நீடித்தது.

News March 9, 2025

16 வயது சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 16 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்த 18 வயது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை இன்று(மார்ச்.09) போலீசாரால் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2025

இயற்கை எழில் கொஞ்சும் அன்னமலை முருகன் கோயில்!

image

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்கியவர் கிருஷ்ண நந்தாஜி. அவரோடு மக்களும் இணைந்து நிறுவியுள்ளனர். கோயிலின் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது சிவன் குகை. இங்கிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் குகை அமைந்துள்ளது. இதில் தான் அன்னமலை கோயில் அமைய காரணமாக அமைந்த கிருஷ்ண நந்தாஜி தவம் செய்ததாக தகவல்.

News March 9, 2025

பாதுகாப்பு பணியில் 380 போலீசார்- SP அறிவிப்பு

image

புதுக்கோட்டை நகரில் வரலாற்று சிறப்புமிக்க திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 380 காவல்துறையினர் ஈடுபட இருப்பதாகவும், காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர், இப் பணியில் ஈடுபட இருப்பதாகவும் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதாக எஸ்பி அபிசேக் குப்தா இன்று இரவு தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

4 விருதுகளைத் தட்டிச் சென்ற சேலம் கோட்டம்!

image

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) சார்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் எரிபொருள் சேமிப்பு, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக 4 விருதுகளை வென்று சிறப்பித்துள்ளது.

News March 9, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 9 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

News March 9, 2025

அடுத்த வாரத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் அடுத்த வாரம் மார்ச்.15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மார்ச் 8, 9 தேதிகளில் ஈரநிலப் பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. இயற்கை ஆர்வலர்கள், பறவை கண்காணிப்பாளர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

News March 9, 2025

இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது

image

சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் தனசேகர் கொளத்தூர் கூட்ரோடு அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த குமார், அரசம்பட்டு சேர்ந்த தாமோதரன், சோழவண்டிபுரம் காலிபா ஆகிய 3 பேரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

News March 9, 2025

கேட்ட வரம் கொடுக்கும் கொண்டத்துக்காளியம்மன்

image

திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக்காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குண்டம் திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.

error: Content is protected !!