Tamilnadu

News March 9, 2025

புதுவையில் நடக்கும் பாலியல் தொழில்

image

புதுவை அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனுவில், “சமூக வலைத்தளங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல் வெளிப்படையாகவே விளம்பரங்களை செய்கிறது. அதில், எந்த ஜோடிகள் வேண்டுமானாலும் எங்கள் எண்ணை தொடர்புகொண்டு, அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இது மாநிலத்தின் பெருமைக்கு மிகப்பெரும் தலைகுனிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2025

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

image

கூடலூர் – உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை என்ற இடத்தில் இன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் சுற்றுலா பேருந்து 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்திற்கு இடத்திற்கு ‌மருத்துவ குழுவினர், மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

News March 9, 2025

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கிடா விருந்து

image

திருப்பூர் 43வது வட்ட திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 1,072 பேருக்கு அறுசுவை கிடா விருந்து வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோட்டில் நடைபெற்றது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார். இதில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 9, 2025

திண்டுக்கல்: நாட்டு வெடி வெடித்து ஒருவர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோம்பைபட்டியில் நாட்டு வெடி வெடித்து பாலமுருகன் என்பவர் உயிரிழந்தார். கடையின் மாடியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடியை வேறு இடத்துக்கு மாற்றியபோது வெடித்துச் சிதறியது. நாட்டு வெடி வெடித்து படுகாயம் அடைந்த கண்ணன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2025

கே.செல்வப் பெருந்தகை நாளை கோவை வருகை

image

கோவை மாநகராட்சி 74-வது வார்டு கவுன்சிலர் எஸ்.சங்கர் இன்று (மார்ச்.9) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் கே.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் நாளை (மார்ச்.10) மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து வரும் விமானத்தில் கோவை விமான நிலையம் வந்து அடைகிறார் என குறிப்பிட்டிருந்தார்.

News March 9, 2025

பேராசிரியைக்கு பாராட்டு தெரிவித்த ஓபிஎஸ்

image

“எண்டே ஆண்கள்” என்கிற மலையாள நூலை “எனது ஆண்கள்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருதினை உலக மகளிர் தினத்தில் பெற்றுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியை விமலாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். இது போன்று பல நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்யவும் வாழ்த்துக்கள்” என தேனி மாவட்டம் போடி எம்எல்ஏ ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்புதுப்பட்டு கிராமத்தில் இன்று காலை(மார்ச்.09) 20 பேர் பயணம் செய்த வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேர் எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காயம் அடைந்த ஐந்து பேர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 9, 2025

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News March 9, 2025

பிறந்து 42 நாட்களான குழந்தை உயிரிழப்பு 

image

கோயம்பேடு, ரோகினி தியேட்டர் அருகே உள்ள பாலத்தின் கீழ் வசிக்கும் தம்பதியின் குழந்தை (42 நாள்), பிறந்ததிலிருந்து உடல் நலக்குறைவுடன் இருந்து வந்துள்ளது. நேற்று (மார்.8) காய்ச்சல் அதிகமாக இருந்தது. உடனே, கே.எம்.சி மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 9, 2025

தேன் உற்பத்தி பயிற்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

தேனி அருகே உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச தேன் உற்பத்தி பயிற்சி நாளை 10.03.2025 முதல் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் சேர விரும்பும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என பயிற்சி வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்புக்கு இந்த 9500314193, 9043651202, 04546-251578 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த வகுப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

error: Content is protected !!