Tamilnadu

News March 9, 2025

குமரிக்கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இம்மாதம் 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சூறைக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்வதை இந்த தேதிகளில் தவிர்ப்பது நல்லது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை நாளை திங்கட்கிழமைக்குள் முடித்து விடுவதும் நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2025

காங்கேயத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கரூர் சாலையில் உள்ளது வீரணம்பாளையம். இங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே திருப்பூரில் இருந்து கரூர் செல்ல 20 பேருடன் வேன் இன்று மாலை சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வேனில் இருந்த 15 பேர் லேசான காயமடைந்தனர். பின் அவர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News March 9, 2025

கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு 

image

கோவை கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவத் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற விரும்பும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) இலவச ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 9, 2025

பணிக்கம்பட்டி பெயிண்டர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் (50). பெயிண்டரான இவர் கடந்த 7ம் தேதி கரூர் மாவட்டம் பணிக்கம்பட்டி சந்தையில் 10அடி உயர சுவற்றில் தனியார் ஜவுளிக்கடை விளம்பரம் பெயிண்ட் செய்த போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பெரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 9, 2025

சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் விபத்து: தந்தை கைது

image

மயிலாடுதுறையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த வயலில் விழுந்தது. இதனால் பின்னால் அமர்ந்திருந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய சிறுவன் 18 வயது நிரம்பாததாலும் உரிமம் பெறாததாலும் காயம் பட்ட சிறுவனின் தயார் அளித்த புகாரின்பேரில் சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

News March 9, 2025

நெல்லை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 28 கோடி இழப்பீடு 

image

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் இந்த ஆண்டிற்கான முதலாவது தேசிய லோக் அதாலத் நேற்று பாளை நீதிமன்றத்தில் நடந்தது.லோக் அதாலத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 7,314 வழக்குகளில் 3,825 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 28 கோடியே ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி சாய் சரவணன் உத்தரவிட்டார்.

News March 9, 2025

விருதுநகரில் ரூ.3.75 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

திருச்சியை சேர்ந்த கணேசன் என்பவர் விருதுநகர் மாவட்டத்தில் கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் மது விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்போது சத்திரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகே இவரது காரை சோதனையிட்டத்தில் அதில் தனியார் மது விற்பனைக்கூடங்களிலும்,மெத்தனால் ஆய்வகங்களிலும் லஞ்சமாக பெற்ற ரூ.3.75 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News March 9, 2025

நல்லம்பள்ளியில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

image

நல்லம்பள்ளி அடுத்த, புறவடை பகுதியை சேர்ந்த ஷேர்லின்பெல்மா, (வயது 44) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்தபின் மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

News March 9, 2025

புளியம்பட்டி அருகே விபத்தில் 2 பேர் பலி

image

சத்தத்திலிருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த செம்படா பாளையத்தை சேர்ந்த ரமேஷ், உன்னம்மாள் ஆகியோர் புளியம்பட்டியில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற லாரி புளியம்பட்டி நல்லூர் அருகே மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் உயிர் இழந்து விட்டனர். உடல்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துபோலீசார் விசாரணை செய்கின்றனர்.

News March 9, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

புதுக்கோட்டை மாவட்டதில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற (மார்ச்-11) அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால்,கடும் வெயிலை தாங்க முடியாத புதுக்கோட்டை மக்கள் மழையை எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

error: Content is protected !!