Tamilnadu

News March 9, 2025

நெல்லையில் மண் சுமப்பதே பரிகாரம் எங்கு தெரியுமா.?

image

நெல்லை, உவரி பகுதியில் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு சிவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணத்தடை, பித்ரு தோஷம் போன்றவை நீங்குவதற்காக பக்தர்கள் கடற்கரை மண்ணை ஓலைப்பட்டியில் சுமந்து கொண்டு வந்து கொட்டி வழிபடுவது இங்கு விசேஷமாக இருக்கிறது. இந்த பரிகார முறை காலம் காலமாக நடைபெற்று வருகிறது. SHARE பண்ணுங்க

News March 9, 2025

ஈரோட்டில் நேற்று 101 டிகிரி வெயில்

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 100 டிகிரி மற்றும் அதனை கடந்து வெயில் வாட்டுகிறது. நேற்று, 38.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வாட்டியது. இது, 101 டிகிரி பாரன்ஹீட் முதல் 101.8 டிகிரி பாரன்ஹீட் அளவிலான வெப்பம் உணரப்பட்டது.குறிப்பாக காற்றில் ஈரப்பதம் இன்றி வெப்பமான நிலையே நீடித்தது. மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து காணப்பட்டது.

News March 9, 2025

இந்து முன்னணியினர் 300 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அபிராமியம் பகுதியில் வழிபாடு செய்த பக்தர்கள் மீது அடக்குமுறை செய்ததை இந்து முன்னணி நிர்வாகிகள் விசாரிக்க சென்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக திருப்பூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 300 பேரை நேற்று கைது செய்தனர்.

News March 9, 2025

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,912 வழக்குகளுக்கு தீர்வு!

image

சேலம், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி உள்ளிட்ட நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 16 அமர்வுகளில் சமரசம் செய்யக்கூடிய 5,024 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 3,912 வழக்குகளில் தீர்வுக் காண்ப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 48.36 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 9, 2025

இந்தியன் வங்கியில் விவசாய கடன் பெறலாம் 

image

சிவகங்கை மாவட்டதில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது . மானியம் உள்ள KCC விவசாய நகை கடன் ,விவசாயகடன், மானியம் இல்லாத தங்க நகைகடன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது .இதனை பெற விவசாயிகள் பட்டா, சிட்டா நிலவரி செலுத்திய ரசீது, ஆகியவை கொண்டு வங்கி கிளையை அணுக வேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 9, 2025

விருதுநகரில் மாணவர் தற்கொலை

image

விருதுநகர் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மாரிமுத்து. இவர் விருதுநகர் அடுத்த சூலக்கரையில் ஐடிஐ படித்து வந்தார்.சரியாக படிக்காமல் மது அருந்தி வந்தவரை பெற்றோர் கண்டித்தனர்.இநநிலையில் மாரிமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 9, 2025

போதை புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

image

கோவைக்கு இன்று (9.3.25) மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதை புழக்கத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

News March 9, 2025

தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீதுகடும் நடவடிக்கை 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டுவதாக தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News March 9, 2025

நிலங்களை அளவிட இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவிட செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்க புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்நிலையில் மாவட்டத்தில் நிலங்களை அளவிட இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

News March 9, 2025

தொண்டி அருகே சிறுவன் கண்மாயில் மூழ்கி பலி

image

தொண்டி அருகே பதனக்குடி மேலக்குடியிருப்பை சேர்ந்த சுரேஷ் -ஆனந்தி இவர்களது மகன் விஷ்ணுவர்த்தன் (7) இவரை நேற்று (7) மாலையிலிருந்து காணவில்லை. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்த நிலையில் இன்று (மார்ச் 8 ) சுரேஷ் வீட்டின் அருகில் உள்ள பதனக்குடி கண்மாயில் விஷ்ணுவர்த்தன் இறந்து கிடந்துள்ளார் .இது குறித்து எஸ்பிபட்டிணம் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!