India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி மற்றும் வைபர் இணைப்பு பெற்று பணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள ஆசாரிப்பள்ளம் வடிவீஸ்வரம் இடலாக்குடி உள்ளிட்ட பகுதி வாடிக்கையாளர்களுக்கு மறு இணைப்பு மேளா 12 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை வண்ணாரப்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தொலைபேசி ஆலோசனை குழு கூட்டம் நேற்று (மார்ச்-08) நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் 4G சேவையை துரிதப்படுத்தவும் தொலைதொடர்பு சேவை மக்கள் அனைவருக்கும் தாமதமின்றி விரைவாக கிடைப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக தொலைதொடர்பு துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக ராபர்ட் ப்ரூஸ் எம்பி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மினி பஸ் இயக்க பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உளுந்தூர்பேட்டையில் 15 வழித்தடங்களில் 44 பேரும், கள்ளக்குறிச்சியில் 17 வழித்தடங்களுக்கு 18 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில், 25 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள புறம்போக்கு நிலங்கள், பட்டா இல்லாத நிலங்கள், அரசு விதிமுறைக்கு உட்பட்டு முறையாக கணக்கெடுப்பு செய்திட வேண்டும், நகரப் பகுதிகளில் வீடுகள் கட்டி வீட்டு மனைப்பட்டா பெறாத நபர்களை கணக்கீடு செய்து தகுதியின் அடிப்படையில் பட்டாக்கள் வழங்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் பல புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் ▶முருகன் கோயில் மருதமலை. ▶ஈச்சனாரி விநாயகர் கோயில். ▶கோனியம்மன் கோயில். ▶பூரி ஜகனத் கோயில். ▶பேரூர் பட்டீஸ்வரர் கோயில். ▶தியானலிங்க கோவில். ▶காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில். ▶மாசாணியம்மன் ஆலயம். ▶தண்டுமாரி அம்மன் ஆலயம். ▶வெள்ளியங்கிரி சிவன் மலை கோயில் ஆகிய கோவில்கள் உள்ளன. கோவை மக்களே உங்க குலதெய்வ கோவில்களை கீழே கமெண்ட் பண்ணுங்க. Share பண்ணுங்க
தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்ட நீதிமன்றம், பெரியகுளம் நீதிமன்றம் , உத்தமபாளையம் நீதிமன்றம், போடி நீதிமன்றம் மற்றும் ஆண்டிபட்டி நீதிமன்றங்களில் நேற்று (மார்ச் .8) லோக் அதாலத் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 1021 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அத்தகைய வழக்குகள் மூலம் ரூ.64,06,39,366-க்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நீதித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சண்முகாபுரம் வி.பி.சிங் நகரை சேர்ந்தவர் கவிதா. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். இதை நம்பிய, கவிதா 1 லட்சத்து 24 ஆயிரத்து 991 ரூபாய் அனுப்பி, ஏமாந்தார். இதுகுறித்து நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விழிப்புடன் இருங்கள்..
தேனி மாவட்ட இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் PMEGP திட்டத்தின் கீழ் மானியத்தில் கடனுதவி பெறலாம். உற்பத்தி நிறுவனங்கள் துவங்க ரூபாய் 25 இலட்சமும், சேவை நிறுவனங்கள் துவங்க ரூ.10.00 இலட்சமும் வங்கிக் கடன் பெறலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய <
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 4,351 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.19 கோடி 18.22 லட்சம் தொகைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீதிமன்றங்களில், சமரசம் மூலம் இந்த தீர்வுகள் எடுக்கப்பட்டன. பொதுமக்களின் நீதி நிலுவை குறைப்பில் இதனால் முக்கிய முன்னேற்றம் கண்டது குறிப்பிடத்தக்க்கது.
Sorry, no posts matched your criteria.