Tamilnadu

News March 8, 2025

கரூரில் ஆந்திரா தம்பதியினர் உட்பட 3 பேர் கைது

image

கரூர் க.பரமத்தியை சேர்ந்தவர் வினோத்குமார் (30). இவர் நேற்று முன்தினம் சாலையில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 பணத்தினை பறித்து சென்றனர். விசாரணை மேற்கொண்டு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனுபடி சாய் தேஜா (27), கம்மா சங்கரம்மா (25), பாலாஜி (19), ஆகிய மூன்று பேரை க.பரமத்தி போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 8, 2025

கிண்டியில் வேலைவாய்ப்பு

image

சென்னை கிண்டியில் உள்ள தலைமை நீர் பகுப்பாய்வகத்தில், வேதியியலாளர், ஆய்வக நுட்பறிஞர், ஆய்வக உதவியாளர் என 36 காலிப் பணியிடங்கள் உள்ளன. ரூ.8,500 முதல் ரூ.21,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பங்களை cwadph.chn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மார்ச் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

News March 8, 2025

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

ஒடுகத்தூர் அருகே 17 வயது சிறுமியை, அதேப்பகுதியை சேர்ந்த திருமால் (வயது 25) 9 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். 4 மாத கர்ப்பமான சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். திருமால் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 8, 2025

கணவனை தாக்கிய கள்ளக்காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு

image

பெரணம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் பாண்டியன் – செல்வி. இவருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர்.பாண்டியன் தேவிகாபுரத்தை சேர்ந்த சக்திவேல் கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.பாண்டியன் மனைவிக்கும் சக்திவேலுக்கும் தகாத உறவு ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளார்.இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போளூர் டிஎஸ்பி மனோகரன்,சேத்துப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு.

News March 8, 2025

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் வல்லுனர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ரூ.32,500 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பில் டிகிரி பெற்றவர்கள் வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  ஷேர் செய்யுங்கள்

News March 8, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி

image

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இதை ஷேர் செய்யுங்கள். 

News March 8, 2025

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் யாசீர். இவர், நேற்று (மார்.8) காலை வெளியே சென்றுள்ளார். அப்போது, மனைவி ஆயிஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டிற்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 8, 2025

வயிற்று வலியால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை

image

விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுஜித் பிளஸ் 2 படித்துள்ளார். இவர் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ( மார்ச் 07 ) நேற்று வயிற்று வலியால் அவதியடைந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2025

பாம்பு கடித்து வெல்டிங் கடை உரிமையாளர் பலி

image

காஞ்சிபுரம், குருவிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). வெல்டிங் கடை நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் (மார்.6) மாலை தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரக்கட்டைகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்தது. உறவினர்கள் அவரை கீழ்பேரமநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று (மார்.7) உயிரிழந்தார்.

News March 8, 2025

திருவள்ளூர் கோர விபத்து: லாரி ஓட்டுநர் கைது

image

கே.ஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டதில் பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 38க்கும் மேற்பட்டோர் மிகவும் ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!