India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனககிரீசுவரர் கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவிலில் ஒரே கருவறையில் 2 சிவ லிங்கங்கள் உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, மனத்துயரம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி செயற்கை முகாம் நடைபெற உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். கூடுதல் தகவல்களைப் பெற விழுப்புரம் தொலைபேசி எண் 04146 290673 / 294 989 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் 12-ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் நகரில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை தொடர்ந்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பங்கேற்றார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் க்ஷீ சௌந்திரநாயகி அம்மன் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 6 மணிக்கு மாபெரும் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் கல்லல்-காரைக்குடி சாலையில் நடைபெறவுள்ளது. இதில் பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுகின்ற முதல் 4 சோடி காளைகளுக்கு விழா கமிட்டியார் சார்பில் ரொக்கத் தொகையாக பரிசுகள் வழங்கப்படும்.
இந்தியாவின் மிகப்பெரிய ராட்டினம் டெல்லியில் உள்ளது. அதே போல மும்பையில் ஒரு பிரம்மாண்ட ராட்டினத்தை அமைக்க மும்பை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ராட்டினத்தை கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழி பூங்காவில் நிறுவ கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னிமலை டவுன், ஒன்பதாவது வார்டு பார்க் சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு பின்புறம் காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்தெறிந்தது. இதுகுறித்து உடனடியாக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். மொடக்குறிச்சியில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை ரங்கமலை கணவாய் அருகே திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சேர்ந்த குடும்பம் வெள்ளகோவில் நாட்ராயன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது டயர் வெடித்ததில் கார் இடதுபுறம் இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க் அறிவிப்பு பலகையில் மோதி கீழே உருளாமல் நின்றது. இதனால் யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லை.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் வலுவதுரில் பிரசித்திபெற்ற அக்னிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு 5 திங்கட்கிழமை வந்து நெய் தீபம் ஏற்றி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், குடும்ப பிரச்சனை, மனதளவில் ஏற்படும் பிரச்சனை தீரும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Sorry, no posts matched your criteria.