India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) சார்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் எரிபொருள் சேமிப்பு, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக 4 விருதுகளை வென்று சிறப்பித்துள்ளது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 9 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் அடுத்த வாரம் மார்ச்.15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மார்ச் 8, 9 தேதிகளில் ஈரநிலப் பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. இயற்கை ஆர்வலர்கள், பறவை கண்காணிப்பாளர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் தனசேகர் கொளத்தூர் கூட்ரோடு அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த குமார், அரசம்பட்டு சேர்ந்த தாமோதரன், சோழவண்டிபுரம் காலிபா ஆகிய 3 பேரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக்காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குண்டம் திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இது சகல தோஷங்களும் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது. இது சூரியனின் அம்சத்துடன் திகழும் ஆலயமாக உள்ளது. மேலும் வேலை வாய்ப்பு கிடைக்க பக்தர்கள் இங்கு தரிசனம் செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் சிகப்புவஸ்திரம், எருக்க இலை, கோதுமை தானியம் கொண்டு வழிபட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை தருகிறார். ஷேர் பண்ணுங்க.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (09/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – அம்பிகா (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
சிவகாசி முருகன் காலனி சாலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகில் இன்று சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (30) என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியுடன் மாரிமுத்து என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அவரை சில நாட்களுக்கு முன் கருப்பசாமி கண்டித்த நிலையில் அவர் தலைமையிலான கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பேச்சுலர் அல்லது டிப்ளமோ என் டெலி கம்யூனிகேஷன் கல்வித் தகுதி உள்ள ஐந்து வருடங்கள் பணி அனுபவம் உள்ள ஆண்கள் சவுதி அரேபியாவில் பணி செய்ய விருப்பமிருந்தால் அரசு துறை மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள புகைப்படத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இன்று (09.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.