Tamilnadu

News March 10, 2025

பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது

image

சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ரவி (45). தனது தம்பியின் மகன் காமேஷ் (23) மூலம் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். அவரை தடுக்க முயன்ற நரசிம்மன் (70) படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணையில் போதை பழக்கத்திற்கு அடிமையான காமேஷ், சென்னேரி வனப்பகுதியில் மறைந்திருந்தது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 10, 2025

சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே திருட்டு

image

செரப்பனஞ்சேரியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கடந்த 5ஆம் தேதி ரூ.5,000 பணத்துடன் காரில் சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். பணத்தை காரில் வைத்துவிட்டு, சார் பதிவாளர் அலுவலகம் சென்றுவிட்டு திரும்ப வந்துபார்த்தபோது பணம் காணாமல்போனது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் வருவதுபோல் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 10, 2025

மாநகராட்சி ஆணையர் நியமனம்: அன்புமணி வலியுறுத்தல்

image

சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும், அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும் என பா.ம.க. மாநில தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 10, 2025

ஜோலார்பேட்டை டாஸ்மாக் அருகே வாலிபர் சடலம்

image

ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே, அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை அருகே உள்ள கிணற்றில், ஆன் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மிதந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே பொதுமக்கள் கூட்டம் அங்கே அலைமோதியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 10, 2025

முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி

image

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கிருஷ்ணகுமாரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கடந்த 2021ஆம் ஆண்டு, விரலை வெட்டியதற்காக பழிக்குப் பழியாக உயிரை வாங்கியது விசாரணையில் அம்பலம். 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது விரலை வெட்டிய பாஜக நிர்வாகியை, அதே நாளில் வெட்டி கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 10, 2025

விக்ரமன் மனைவி போலீசில் புகார்

image

பெண் உள்ளாடையுடன் ஓடி பெண்களுக்கு பாலியல் கொடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் விக்ரமனின் வீடியோ இணையத்தில் கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அது சினிமா ஷூட்டிங் என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் விளக்கமளித்தார். படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்ரமனின் மனைவி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் உள்ளாடையுடன் ஓடினாரா?

image

பிக்பாஸ் பிரபலம் விக்ரமன், பெண்கள் அணியும் உள்ளாடையுடன் ஓடி பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணையத்தில் வீடியோ கசிந்தது. இதுகுறித்து அவர் கூறிய விளக்கத்தில், “சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை அடிப்படை ஆதாரமின்றி, உண்மைத்தன்மையை ஆராயாமல் ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப்பற்றி அவதூறு பரப்புவதை விடுத்து வேறு வேலை இருந்தால் பாருங்கள்” எனத் தெரிவித்தார்.

16 செல்வங்களை கொடுக்கும் லட்சுமி நாராயணி திருக்கோயில்

image

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் திருமலைக்கோடியில் அமைந்துள்ளது அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில். இந்த கோவில் 1500 கிலோ தங்கத்தில் ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு மகா மண்டபத்தில் நின்று கொண்டு அம்மானை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.இந்த கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள் என்று அழைக்கப்படுகிறது. #பகிருங்கள்

error: Content is protected !!