India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.* நண்பர்களை உஷார் படுத்தவும்*
பவானி சாகர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கோடம்பாளையத்தில் சாலையில் உறங்கியவர் மீது மோதாமல் இருக்க காரை திரும்பிய போது விபத்து நேரிட்டது. கர்நாடக மாநிலம் பி.ஜி. பாளையத்தை சேர்ந்த மைக்கேல் உயிரிழந்த நிலையில் 9 பேருக்கு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் 25.3.2025 முதல் 28.3.2025 வரை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் 25.03.05 முதல் 27.03.205 வரையிலான மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், திரிசூலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில். இங்கு இறகு இல்லாத சபவேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கார்த்திகை தீபம், சிவராத்திரி, பங்குனி உத்தரத்தன்று திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பு. இங்கு வழிபட்டால் கல்வி மற்றும் வேலையில் அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு வஸ்தினம் அணிவித்து அபிஷேகங்கள் செய்கிறார்கள். சேர் பண்ணுங்க.
சென்னையில் இன்றும், நாளையும் 21 – 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பி.எம். வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 மாத இலவச திறன்பயிற்சி வழங்கப்படுகிறது. கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் பயிற்சியில் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை, ரூ.6,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-25201163, 9946640017. ஷேர் பண்ணுங்க.
தி.மலை மாவட்டம் படவேடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 6.40 மணி முதல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் 3 அல்லது 5 நாட்கள் தங்கி சேவை செய்தால் அம்மை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், திருமாண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க.
வேலூரில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் அண்மையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 4 பேர் பலியாகினர். இந்நிலையில், விபத்தில் காயமடைந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
சேலம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (மார்ச்.10) பா.ம.க. பிரமுகர் தமிழ்செல்வன்- சந்திரலேகா ஜோடி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பா.ம.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வரும் மார்ச் 30-ம் தேதி முதல் ஒரு நாளைக்கு தினமும் 2 முறை சென்னை – தூத்துக்குடி என சேவைகளை தொடங்க உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் மொத்தம் 7 விமானங்கள் தினசரியாக இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.*விமானத்தில் செல்லும் நண்பர்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.