Tamilnadu

News March 10, 2025

ஆட்சியரிடம் 340 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் உமா அவர்கள் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை, பொதுமக்கள் வழங்கினர். இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 10, 2025

மனைவியை எரித்து கொலை செய்த கணவர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி சேர்ந்த பொன்னுச்சாமி (38), கடந்த 5ஆம் தேதியன்று மனைவி முனீஸ்வரியின் (28), நடத்தையில் சந்தேகப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். அப்போது தீக்காயமடைந்த பொன்னுச்சாமி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களது 3 பெண் குழந்தைகளும் தற்போது நிற்கதியாய் தவிக்கின்றனர்.

News March 10, 2025

குறைதீர் கூட்டத்தில் 645கோரிக்கை மனு

image

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், உதவித் தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 645 மனுக்கள் பெறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

News March 10, 2025

தாட்கோ மூலமாக இலவச சிறப்பு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

ஆலத்தூர் தாலுகாவில் மக்கள் தொடர்பு திட்ட முகம்

image

ஆலத்தூர் தாலுக்கா, மாவிலங்கை கிராமத்தில், வருகிற 12ஆம்தேதி புதன்கிழமை, மாவட்டக் கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

News March 10, 2025

இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா 22. திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் கரூர் மாவட்டம் குள்ளப்பட்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத போது அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். க.பரமத்தி போலீசார் உடலை கைப்பற்றி இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 10, 2025

கோடைக்கால அட்டவணையை வெளியிட்ட சேலம் விமான நிலையம்

image

சேலம் காமலாபுரத்தில் இருந்து சென்னை, கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், கோடைக்கால பயண நேர அட்டவணையை சேலம் விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 30 முதல் கோடைக்கால அட்டவணை அமலுக்கு வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.

News March 10, 2025

ராணிப்பேட்டையில் கடும் வெப்ப அலை வீசும்

image

ராணிப்பேட்டையில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 10, 2025

தி.மலை: மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், இன்று (10.03.2025) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில், அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

News March 10, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுப்பு

image

கடலூரில் 3வது புத்தகத் திருவிழா, கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற மார்ச் 22-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையில் நடைபெறும். விழாவில் எழுதி முடிக்கப்பட்ட உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!