India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் மார்ச்.12 முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல்வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 வரை டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. நேரடியாகவோ (அ) 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தங்கள் பெயரைப்பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (10/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் சிறப்பாக செயல்படவும், வாகன விபத்துகளை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்து வழித்தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் விருதுநகர்-சிவகாசி சாலையில் மதுரை-சாத்தூர் நெடுஞ்சாலை சந்திப்புக்கும் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையிலான பகுதியில் உடனடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று (10.03.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் 100 பாரன்ஹீட் வெப்பம் வெயில் சுட்டெரித்து வருகிறது கடந்த சில நாட்களாக விஸ்கி பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது டாஸ்மார்க் விற்பனையாளர் கூறுகையில் 200 டாஸ்மார்க் கடைகள் நாள் ஒன்றுக்கு மூன்று கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது தற்போது வெயிலின் தாக்கத்தால் உயிர் விற்பனை 40 சதவீதம் கூடியுள்ளது என தெரிவித்தார்
குமாரபாளையத்தில் பிறந்து நாமக்கல் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்தவர் நகைச்சுவை நடிகர் பாண்டு. 1981ஆம் ஆண்டில் ’கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படம் மூலாம் அறிமுகமாகி, நூற்றுக்கணக்கான படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் சிறப்பான ஓவியராகவும் இருந்தவர். அதிமுக கொடி, சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு தனது 74வது வயதில் பாண்டு உயிரிழந்தார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. வெயில், தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு சற்று குறைந்தது. இதன் காரணமாக முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.80 ஆகவே நீடிக்கிறது.
சங்கரன்கோவில் புதிய நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2- 20 வரை உள்ள 18 கடைகளுக்கு 12.03.2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கும் 21 -37 வரை உள்ள 16 கடைகளுக்கு 13.03.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கும் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.