India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <
சிவகங்கை மாவட்ட நிர்வாகம்.மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம். சிவகங்கை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (15.03.2025) சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.8ம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதும் கண்டிப்பாக வேலை.
தேவாரத்தை சேர்ந்த சிவநேசன். தனது மனைவி வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் ரூ.24.69 லட்சம் எடுக்கப்பட்டு மர்ம நபர்கள் மோசடி செய்ததாக தேனி குற்றத் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகாா் அளித்தாா். விசாரணையில் சிவநேசன் மனைவி வங்கி கணக்கு செயலியை முறைகேடாகப் பயன்படுத்தி பீகாரை சேர்ந்த அா்ஜூன்குமாா் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நேற்று (மார்.10) தேனி அழைத்து வந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகள் நில உடமை சரிபார்ப்பு முகாமில் தங்களது விவசாய நில பட்டா, ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகிவற்றை மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்து தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக் கொண்டு பயன்பெற வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE NOW..
கரூர், இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே <
#மாலை 4 மணிக்கு ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் உயர்த்தி வழங்க வலியுறுத்தி குலசேகரம் சந்திப்போம் முன்பு எஸ்டேட் ஒர்க்கல்ஸ் ஆர்ப்பாட்டம்.#இன்று(மாரச் 11) மாலை 5:30 மணிக்கு வங்கியில் போதிய பணியாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி வெட்டூர்ணிமடம் ஐஓபி வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.#மண்டைக்காடு கோவிலில் 10ஆம் நாள் கொடை விழா நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்கள் வருமானத்தை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும். மாநில அளவில் சேலம் மாவட்டம் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ.9,101.99 கோடி வசூலித்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்த <
தமிழகத்தில் கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பிற்பகல் 1 மணி வரை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு, ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை 12ம் தேதி காலை 11 மணி அளவில் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. ஈரோட்டில் உள்ள மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டார்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்
Sorry, no posts matched your criteria.