Tamilnadu

News March 12, 2025

மதுரை: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரசு மானியம் பெற விவசாயிகளுக்கு தனி அடையாள எண் பதிவு செய்யப்படுவதால் தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனே பதிவு செய்ய வேண்டும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார். தங்கள் கிராமத்தில் நியமிக்கப்பட்ட தோட்டக்கலை, வேளாண் அலுவலர்கள், சமுதாய வளப் பணியாளர்களிடம் ஆதார், கம்ப்யூட்டர், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என்றார். *ஷேர்

News March 12, 2025

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை

image

சென்னையில், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில், 20,000 கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இவற்றில், பாரிமுனை, சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது குறித்து புகார்கள் வந்துள்ளன. இந்த கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சரி செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

News March 12, 2025

150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாளை கோபாலன் மஹாலில் இன்று நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜொலிந்தாள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை பாளை எம்.எல்.ஏ. அப்துல் வஹாப் துவக்கி வைத்தார்.இதில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

News March 12, 2025

மழையிலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத புதன்க்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News March 12, 2025

சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பலி

image

திருக்கழுக்குன்றம் அடுத்த பள்ளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (46). இவரது கணவர் துளசி ஜெயராம். இருவரும் பொறியியல் கல்லூரி உதவியாளர்கள். இருவரும் நேற்று (மார்.11) மாலை பைக்கில் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக காட்டுக்கூட்டு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆதிலட்சுமி சாலையில் தவறி விழுந்த போது, பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 12, 2025

பெரம்பலூர் அருகே ஓடையில் மூழ்கி வாலிபர் பலி

image

பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தில் முத்து 28. அவரது தாயார் ராகிணி இருவரும் அதே ஊரில் உள்ள ஓடையில் மீன் பிடிக்க சென்றனர். முத்து விரித்த வலையில் சிக்கிய மீன்களை பிடிக்க, தண்ணீரில் கேன் மீது அமர்ந்து மீன்களை பிடித்தனர்.அப்போது எதிர்பாராதவிதம முத்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.

News March 12, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வி உதவித்தொகை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி உதவி தொகை குறித்தான கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது இந்தக் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

News March 12, 2025

தென்காசியில் இலவசமாக களிமண், வண்டல் மண் பெறலாம்!

image

தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி குளம் மற்றும் கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை, விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மண் பெற்றுக்கொள்ள tnesevel.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். SHARE IT.

News March 12, 2025

புதுவை காவல்துறைக்கு  ரூ. 401.50 கோடி ஒதுக்கீடு

image

இன்று நடந்த புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி காவல்துறைக்கு 2025-26 நிதியாண்டில் ரூ. 401.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதினைக் கடந்து திருமணம் ஆகாத, கணவரை இழந்த மற்றும் வேலையற்ற ஆதிதிராவிடர் பழங்குடியின மகளிருக்கு மாதம் ரூ. 3000 நிதி உதவி திருமணம், வேலைக்கு செல்லும் வரை வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

News March 12, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து மார்.18 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் திருச்சி-கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூர்-பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!