Tamilnadu

News March 12, 2025

‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ ரீல்ஸ் போட்டி

image

சென்னையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சி’ பாடலுக்கான ரீல்ஸ் போட்டி நடைபெறுகிறது. புதிய ஹூக் ஸ்டெப் உருவாக்கி #செந்தமிழ் நாட்டு தமிழச்சி’ என்ற ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தி சமூக ஊடக கணக்குகளில் பகிரவும். உங்கள் படைப்புகளை வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.

News March 12, 2025

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா ? கமெண்ட் செய்யவும்!

News March 12, 2025

தேனியில் பெய்த மழையின்  அளவு தெரியுமா?

image

கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியாகியுள்ளது .ஆண்டிப்பட்டி 4.8 மி.மீ, வீரபாண்டி 4.6 மி.மீ, பெரியகுளம் 12.0 மி.மீ, மஞ்சளாறு 7.0 மி.மீ, சோத்துப்பாறை 9.0 மி.மீ, வைகை அணை 8.2 மி.மீ, போடிநாயக்கனூர் 2.8 மி.மீ, உத்தமபாளையம் 5.6 மி.மீ, கூடலூர் 2.6 மி.மீ, பெரியாறு அணை 1.2 மி.மீ, தேக்கடி 11.8 மி.மீ, சண்முகா நதி 6.4 மி.மீ. சராசரி மழை அளவு -5.8 மி.மீ.

News March 12, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா ? கமெண்ட் செய்யவும்!

News March 12, 2025

இன்று மாலையுடன் புத்தகத் திருவிழா நிறைவு

image

விழுப்புரத்தில் தற்போது நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழா இன்று(மார்ச்.12) மாலையுடன் நிறைவுபெற உள்ளது. கடந்த மார்ச்.02 ஆம் தேதி துவங்கப்பட்ட இக்கண்காட்சி 10 நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இன்று மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 12, 2025

வென்னிமலை கோயில் திருவிழா- போக்குவரத்து மாற்றம் 

image

பாவூர்சத்திரத்தில் வென்னி மலை முருகன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம், அழகுகுத்தி ஊர்வலம் என பக்தர்கள் அதிக அளவில் வருவதைத் தொடர்ந்து பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே கார், ஆட்டோ செல்ல முடியாத வகையில் காவல்துறை மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் அனைத்தும் செல்வ விநாயகர்புரம் பகுதி வழியாக விடப்பட்டது.

News March 12, 2025

மகளிருக்கு இலவச தையல் பயிற்சி

image

திருப்பரங்குன்றம் பூங்கா பஸ்நிறுத்த தீயணைப்பு நிலைய வளாகத்திலுள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் மார்ச்.20ல் துவங்குகிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணிவரை ஒருமாதம் நடக்கும் முகாமில் விருப்பமுள்ள, 18 முதல் 45 வயது வரையான பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். மார்ச்.19க்குள் 9445600561ல் அல்லது mdu.rudset@gmail.comல் விண்ணப்பிக்கலாம். 

News March 12, 2025

காந்தி சிலைக்கு அமைச்சர் மரியாதை 

image

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் முழு உருவச்சிலை புனரமைக்கப்பட்டு நூலகமாக அமைக்கப்பட்டது. இந்நிலையில் காந்தியடிகளின் சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 12, 2025

சேலம்: ராமேஸ்வரம்- ஹூப்ளி ரயில் ரத்து உத்தரவு வாபஸ்!

image

நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியே செல்லும் ராமேஸ்வரம்- ஹூப்ளி சிறப்பு ரயில்கள் (07355, 07356) 3 நாட்கள் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 13, 20, 27 தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில் நிலையத்தில் இந்த ரயில்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 12, 2025

திருவள்ளூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

image

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, திருவள்ளூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (மார்.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக திருவள்ளுர் வட்டடத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் 3 மணிக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைத்து வந்துவிடுங்கள்.

error: Content is protected !!