India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பருத்தியானது வறட்சியை தாங்கி கொள்ளும். ஆனால் அதிக மழை அல்லது நீர் தேக்கத்தை தாங்காது. எனவே பதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்து கொள்ள வயலில் தேங்கி உள்ள நீரை வடிகால் வசதி செய்து வடிய வைக்க வேண்டும். பின்னர் காம்ப்ளக்ஸ் (19:19:19 ) உரம் தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை 13.03.2025 அன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நடத்துகின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபட்டால் பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு புகார் சென்றது. அதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அதில் குட்கா விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தலா ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்பட்டது.
திசையன்விளை அருகே இடையன்குடியில் கால்டுவெல் நினைவு இல்லம் அமைந்துள்ளது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என கண்டுபிடித்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியவர் இவரே. அயர்லாந்திருந்து தன்னுடைய 24வது வயதில் இந்தியா வந்து 50 ஆண்டுகள் தங்கியிருந்து மொழி குறித்து ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதியுள்ளார். SHARE IT
தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள். கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (வியாழன்) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடன் உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தெரிவித்து உள்ளார்.
காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் இத் திருக்கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
சந்திர சூடேஸ்வரர் கோயில் ஓசூரில் உள்ள பாறை மலையின் மீது அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகும். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் குழந்தை வரம் வேண்டி இத்தலத்தில் உள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It
தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே அருள்மிகு தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கும். இத்தலத்தில் உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.