Tamilnadu

News March 13, 2025

நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்

image

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மேலும் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்: உதகை 32 மி.மீ, குன்னூர் 55 மி.மீ, குந்தா 58 மி.மீ, கோத்தகிரி 45 மி.மீ, பர்லியாறு 43 மி.மீ.

News March 13, 2025

மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

image

உலக தண்ணீர் தினமான வரும் 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்ட நிகழ்வுகளை மொபைல் செயலி வாயிலாக உள்ளீடு செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 13, 2025

3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி எரித்து கொலை

image

தி.மலையில் 3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி ஒருவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விருதாம்பாள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவத்தில் எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 13, 2025

சமயபுரம் கோயிலில் 1 கோடியை தொட்ட காணிக்கை

image

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் நேற்று பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் என்னும் பணி நடைபெற்றன. அதில் ரொக்க பணமாக ரூபாய் 1 கோடியே 06 லட்சத்து 20ஆயிரத்து 548, தங்கம் 2 கிலோ 150 கிராம், வெள்ளி 3 கிலோ 580 கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 103, அயல்நாட்டு நாணயங்கள் 489 கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து பெண்களுக்கு அச்சுறுத்தப்படுகின்ற மாதிரி ஏதேனும் ஆபாச புகைப்படங்கள் வந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் செய்யுமாறும் அல்லது இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், அப்படி புகார் கொடுக்கும் பட்சதில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News March 13, 2025

லிஃப்டு அறுந்து விழுந்து ஊழியர் பலி

image

தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் (ஹயாத்) லிஃப்டு அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் ஊழியர்கள் பயன்படுத்தும் லிஃப்டை, தனியார் லிஃப்ட் நிறுவன ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, லிஃப்ட் திடீரென அறுந்து கீழே விழ, உள்ளே இருந்த ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2025

ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

image

முகுந்தாயபுரம் பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (61). இவர், நேற்று (மார்.12) முகுந்தராயபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2025

தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி

image

கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா 27, இவர் ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று காலை கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் செல்லும் பொழுது தனியார் பஸ் பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில்,சம்பவ இடத்திலேயே பிரேமா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

News March 13, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் “A” திரவம் முகாம்

image

வைட்டமின் “A” குறைப்பாட்டினால் கண்பார்வை இழப்பு, வளர்ச்சி குறைபாடு, ஏற்படும். இதனை தடுக்கும் விதமாக 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கரூரில் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்.

News March 13, 2025

கடலூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு குறும்படம், புகைப்படப் போட்டி

image

கடலூரில் புத்தக திருவிழாவை முன்னிட்டு குறும்படம், மின்பதாகைகள், புகைப்படப் போட்டிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா 22.03.25 முதல் 31.03.25 வரை மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.1,000, ரூ.700 ரூ.500 மதிப்பீட்டிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். SHARE NOW

error: Content is protected !!