India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து நிலுவை, நடப்பாண்டு வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வசூலிக்கப்படுகிறது. அனைத்து பொதுமக்களும் வரும் 31க்குள் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிம கட்டணத்தை செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை, தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. Share பண்ணுங்க
மரக்காணம் அடுத்த மண்டைவாய்புதுக்குப்பத்தில் அமைந்துள்ள இறால் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்பவர் சுதாகர். இவர் கடந்த (மார்ச் 8) தேதி மின்மாற்றிக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் அருகே கார் ஓட்டுநரின் மகள் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அவரின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால்,அதே தெருவில் உள்ள அவரது பெரியப்பா வீட்டிற்கு சென்று, வீட்டுப்பாடங்கள் செய்து வந்தார்.கடந்த 8ம் தேதி, சிறுமி பள்ளி முடிந்து பெரியப்பா வீட்டிற்கு சென்ற போது அவளது பெரியப்பா சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதையடுத்து அவரை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (46), நேற்று (மார்.12) சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் உள்ள ‘தாய் சும்மிட் ஆட்டோபார்ட்ஸ்’ எனும் தொழிற்சாலைக்கு லோடு ஏற்ற சென்றுள்ளார். லோடை இறக்கி முடித்துவிட்டு, வாகனத்திலேயே படுத்து உறங்கியுள்ளார். வாகனத்தை எடுக்க சொல்லி, மற்றவர்கள் எழுப்பியபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது. லோடு ஏற்றிய களைப்பில் உயிரிழந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை கடைக்க சென்ற சிறுமி சற்று நேரத்தில் வந்து சிலர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறினார். விசாரணையில், டூவீலர் மெக்கானிக் முத்துகுமார் 18, சிறுமியுடன் பள்ளியில் படிக்கும் பிளஸ் 12 மாணவர்கள் இருவர்,10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் மற்றும் 17 வயது சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 14.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறஉள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினத்திற்கு 4 ‘இ’ வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் கூரி சாத்த அய்யனார் கோயில் பகுதிக்கு வந்தது. டிப்போவில் இருந்து வந்ததால் பயணிகள் இல்லை. அப்போது பின்னால் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ரோட்டை விட்டு கீழே இறங்கிய போது சகதிக்குள் முன் பக்க சக்கரம் சிக்கிக்கொண்டது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மீட்பு வாகனம் மூலம் அரசு டவுன் பஸ்சை மீட்டனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 2ம் ஆண்டு படித்த இன்பராஜ்(21), கதிர்(21), ஆகியோர் டூவீலரில் சென்றனர். மாவடி விலக்கு பகுதியில் வந்தபோது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்புறம் இருந்த இன்பராஜ் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று அவரது பிறந்தநாள். படுகாயமடைந்த கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மானூர் போலீஸ் விசாரணை.
சேலம் மாவட்டம் கீழ் சின்ன கவுண்டாபுரத்தைச் சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது மனைவி சத்யாவுக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஓசூரில் பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் சத்யா பெற்றோர் வீட்டில் இருந்தபோது, திடீரென குழந்தை உயிரிழந்தது. குழந்தை உடல் நலக்குறைவால் இறந்திருக்கலாம் என பெற்றோர்கள் சந்தேக படுகின்றனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சவுந்தரராஜன்(38) விளாங்குடி நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் தனது பைக்கில் சென்றபோது சாலையோரத்திலிருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராத விதமாக மோதி, படுகாயம் அடைந்த சவுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.