Tamilnadu

News September 6, 2025

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து

image

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் இன்று (செப் 6) காவலர் தினத்தை முன்னிட்டு, கண்கள் இமைப்பதில்லை, ஓய்வில் உறங்குவதுமில்லை, ஓய்வு என்பது உடலுக்குமில்லை, இவ்வாறு இல்லை என்பதே ஏராளம் இருந்தாலும், முடியாது என்பது எம் அகராதியில் இல்லை என சவால்களை எல்லாம் சாதனைகளாக்கும் தமிழ்நாடு காவலர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காவலர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

மதுரையில் நாளை கோவில்களில் நடையடைப்பு

image

நாளை (செப்.,7) சந்திரகிரகணம் இரவு 9:57 மணிக்கு துவங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களில் மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு நாளை காலை 11:41 மணிக்கு நடைபெறும். மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. செப்.8 முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.

News September 6, 2025

விழுப்புரம்: அரசு அதிகார மையத்தில் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு துறையில் பட்டம், 3 ஆண்டு அனுபவம் அவசியம். மாத ஊதியம் ரூ.20,000. விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் கிடைக்கும். கடைசி தேதி 22.9.2025 மாலை 5.45 மணி. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 6, 2025

அம்பேத்கர் விருது: விழுப்புரம் ஆட்சியர் செய்தி

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 6, 2025

சோளிங்கர்: சந்திர கிரகணம் – கோவில் நடை சாற்றப்படும்

image

சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில், செப்.7 அன்று நடைபெற உள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் ஆலயங்களின் நடைகள் சாத்தப்படும். அதே சமயம், ஊர்கோவில் மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்.8 அன்று வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனங்கள் நடைபெறும்

News September 6, 2025

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்

image

புதுச்சேரி முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேசிய தரவரிசை பட்டியலில் கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் 35 வது இடத்திலிருந்து 23வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தென்னிந்திய அளவில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் இக்கல்லூரி மட்டுமே தேர்வாகியுள்ளது பெருமிதமாக உள்ளது.

News September 6, 2025

நாமக்கல்: BDO மாயம் வழக்கில் கார் கண்டுபிடிப்பு

image

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் மாயமானதால், அவரது மனைவி யசோதா பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நாமக்கல் அடுத்த, வேலக்கவுண்டம்பட்டியில் BDO பிரபாகரனின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழலில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .

News September 6, 2025

விழுப்புரம்: செல்போன் தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

விழுப்புரம் மக்களே, உங்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ, திருடுபோனாலோ இனி கவலை வேண்டாம். மத்திய அரசின் சஞ்சார் சாத்தி என்ற <>இணையதளம்<<>> மூலம், உங்கள் செல்போன் தொலைந்தது குறித்துப் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும்போது, செல்போன் எண், IMEI எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவிட வேண்டும். புகார் அளித்தவுடன், உங்கள் போன் அணைக்கப்பட்டுவிடும். உங்கள் செல்போன் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். SHARE பண்ணுங்க!

News September 6, 2025

மனநல மையங்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களும் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மையங்கள் & மறுவாழ்வு மையங்கள் மனநல பராமரிப்பு சட்டம் 2017-படி பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பதிவு செய்யாத மையங்கள் ஒரு மாதத்திற்குள் <>இந்த இணையதளத்தின்<<>> மூலம் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!