India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகள் அமைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 201 ஊராட்சிகளிலும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தும், விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2025ம் ஆண்டு ஐ.சி.சி., சாம்பியன்ஸ் வென்ற இந்தியாவை கொண்டாட பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., கிரிக்கெட் வாரியம் மூன்றும் மாதங்கள் இலவச ரீசார்ஜ் செய்வதாக கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள் உருவாக்கிய போலி லிங்கை சமூக வலைதளங்களில் பரப்பி, வருகின்றனர். இச்செய்தி முற்றிலும் பொய்யான செய்தி இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.
குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இம்மாதம் 22ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
பௌர்ணமியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்ல (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் இன்று (மார்ச் 13) பகல் 12:40 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 2:15 க்கு சென்றடையும். விழுப்புரத்தில் இருந்து (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் 9:25க்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு 11:10 க்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி – அரக்கோணம் புதிய புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், நேற்று (மார்.12) காலை மண்டபத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் மீட்டனர்.
தொட்டியம் அடுத்த தோளூர்பட்டி ஊராட்சி திருச்சி நாமக்கல் சாலையில் அமைந்துள்ள பெரியார் சமத்துவ புறத்தில் நேற்று வீட்டுக்குள் புகுந்த 15 அடி நீளம் உள்ள பாம்பை அடித்துக் கொன்ற வீட்டின் உரிமையாளர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெறும் காட்டுப்பகுதி என்பதால் வீட்டுக்குள் புகுந்த பாம்பை அடித்துக் கொண்டனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3, ஆழியார் மற்றும் பவானி ஆகிய ஆறு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த திட்டங்களுக்காக நீர் எடுக்கப்படும் அணைகளில் நீர்மட்ட எந்தளவு உள்ளது என்பதை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சிறுவாணி அணையின் மொத்த அளவு 49.53 அடியாகும்.
சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனால் இங்கு வந்து வழிபாடு செய்தால் அம்மை, உடலில் உள்ள குறைபாடுகள், குழந்தை வரம் மற்றும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு B.Com, B.Sc, ITI, M.Com, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை மார்ச்.14 கடைசி நாள் ஆகும். <
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ‘தீய சக்தியை வேரறுப்போம்’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் நேற்று(மார்ச் 12) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.