India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறையின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.18,500 முதல் ரூ.23,000 வரையிலான சம்பளத்தில், 8 முதல் பட்டபடிப்பு அளவிளான இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மார்ச் 20-ம் தேதிக்குள் இதற்கான இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 86 சதவீதம் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு முடிந்தது. மீதமுள்ளவர்களும் 10ஆம் தேதிக்குள் கைரேகை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என கூறினர்.
சேலம் அருகே உள்ள SAIL (இரும்பாலை வாளாகம்) நிறுவனத்திற்கும் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் சேலம் மாநகர் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரும்பாலை வளாகத்திற்கு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சம் சிங்கம்பட்டி அடுத்த மாஞ்சோலை ஊத்து பகுதியில் ஆறு மில்லி மீட்டர் மழை நாலுமுக்கு பகுதியில் 4 மி.மீ மழை, பாபநாசத்தில் 4 மி.மீ மழை, கொடுமுடியாறு அணை பகுதியில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் செவிலியர், சமூக ஆர்வலர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தேவையின்றி அலாரம் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேரை ஆர்.பி.எஃப். போலீசார் கைது செய்துள்ளனர். பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் மிகவும் கவனமுடன் பயணிகள் பயணிக்க வேண்டும். பயணிகள் தவறாக பயன்படுத்த வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை. இதே நிலை தொடரும் பட்சத்தில் கடும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 13) நீர்மட்டம்: வைகை அணை: 59.68 (71) அடி, வரத்து: 314 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 114.05 (142) அடி, வரத்து: 257 க.அடி, திறப்பு: 367 க.அடி, மஞ்சளார் அணை: 32.05 (57) அடி, வரத்து: 45 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 70.71 (126.28) அடி, வரத்து: 06 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 31.30 (52.55) அடி, வரத்து: 13 க.அடி, திறப்பு: இல்லை.
ஊட்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க, நீலகிரி நுாலகத்தில், இலக்கியம், கலாசாரம் மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக நாளை, 14ம் தேதி இலக்கிய விழா துவங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
அதில், அரசியல், வரலாறு, சினிமா, இசை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புகழ் பெற்ற, 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இராமநாதபுரத்தில் 3 சென்டி மீட்டர், ஆர்.எஸ் மங்கலம் 25 மி.மீ., மண்டபம் 22 மி.மீ., திருவாடானை 22 மி.மீ., கடலாடி 16 மி.மீ., பரமக்குடி 14.03 மி.மீ., தொண்டி 11 மி.மீ., முதுகுளத்தூர் 9.8 மி.மீ., வாலி நோக்கம் 9.8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் உள்ளன.
Sorry, no posts matched your criteria.