India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கம்பீரமான மலைகள், பசுமையான காடு, சலசலக்கும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட நாகலாபுரம், அமைதியான சூழலில் ஒரு நாளை கழிக்க ஏற்றது. சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள இங்கு ஸ்ரீ வேதநாராயண ஸ்வாமி கோயில், ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர ஸ்வாமி கோயில், கைலாசகோனா நீர்வீழ்ச்சி, உப்பலமடுகு நீர்வீழ்ச்சி, குர்ரம்கொண்டா கோட்டை ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். லொகேஷனுக்கு <
உதகை பேரார் பகுதியில் அருகே தேயிலை பறிக்கச் சென்ற இடத்தில் வனவிலங்கு தாக்கி அஞ்சலை என்பவர் உயிரிழந்துள்ளார். அஞ்சலையின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அஞ்சலையை கொன்ற புலியை பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த சிவகிரி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி, அவரது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் வியாபார செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். தொழிலில் முன்னேற, வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!
குரூப் தேர்வுக்கு தயராகி கொண்டிருக்கும் தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் IV தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 15.03.2025, 22.03.2025 மற்றும் 29.03.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. தங்களின் பெயரை 6379268661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் .
அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை ஆன்லைன் மூலமாக செய்யப்படுகிறது. எனவே குடும்ப அட்டை குறித்த தகவல்களை மேற்கொள்ள இடைத்தரகர்களிடமோ இ சேவை மைய அலுவலர்களிடமோ கையூட்டு எதுவும் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
உதகைக்கு வரும் வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி உதகைக்கு வார நாளில் 6000, வார இறுதியில் 8000 வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசுப்பேருந்துகள், ரயில்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது. உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. இந்த கட்டுப்பாடுகள் ஜூன் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஒன்னல்வாடியில் நேற்று வீட்டில் இருந்த லூர்துசாமி(70), எலிசபெத்(63) ஆகிய முதியோரை மர்மநபர்கள் கழுத்தறுத்து கொலை செய்து வீட்டில் படுக்கைக்கு தீ வைத்து சென்றிருந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை நேரில் விசாரணை மேற்க்கொண்டு கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கும் டிரைவர்களின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டு வருகிறது. சேலம், தருமபுரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 263 பேரின் லைசென்ஸ் 3 மாதத்திற்கு ரத்துச் செய்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை. பர்மிட் இல்லாமல் இயங்கிய வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று மதியம் அரிவாளுடன் நுழைந்த மணிகண்டன் என்ற இளைஞர் அலுவலகத்தில் கண்ணாடி கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தினர் உடனடியாக விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.