India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் பாஜக பெருங்கோட்ட பாரதிய ஜனதா மண்டல மாநாடு ஓமலூரில் ஏப்ரல் 19ஆம் தேதி முத்து மஹாலில் எதிரில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து பாஜக பெருங்கோட்ட தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 13) அதிகபட்சமாக 101.4°F டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில் 2 வது முறையாக வெயில் சதமடித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மாநில அளவிலான மஞ்சப்பை விருது மற்றும் மாவட்ட அளவிலான பசுமை முதன்மையாளர் விருது பெற https://tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியுமான அருள் MLA மீது தாக்குதல் நடத்திய திமுகவினரின் வன்முறை போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும், திமுக ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை. எதிர்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை காட்டாட்சி நடக்கிறது என H ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருமங்கலத்தில் 5 கோடி கடன் பிரச்சனை காரணமாக இரு மகன்களை கொலை செய்து, மருத்துவர் பாலமுருகனும் (52), அவர் மனைவி வழக்கறிஞர் சுமதியும் (47) இன்று காலை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். காவல்துறை விசாரணையில், மருத்துவர் பாலமுருகன் 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -13 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வணக்கம்பாடி ஊராட்சியில் ஏழு கால்நடை மருந்தகங்களுக்கு ரூபாய் 10.70 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை உபகரணங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மருத்துவர்களிடம் இன்று வழங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, ஊராட்சி குழு செயலாளர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ராஜி உடன் இருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருடிய குணா (எ) சிவக்குமார் மீது பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு எஸ்.பி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் குச்சனூரில் தான் உள்ளது . இங்குள்ள கருவறை மூர்த்தியே சனிபகவான்தான். இங்குள்ள சனிக் கடவுள் சுயம்புவாக எழுந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு முன்பாக, சுரபி நதி ஓடுகிறது. இங்கு வந்து வழிபட்டால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் , குடும்பத்தில் உள்ள சிக்கல் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை . மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.
Sorry, no posts matched your criteria.