India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும் என்றும், கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்
தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூர் பகுதியில் பல்வேறு தொல்லியல் நாகரிகங்கள் இருந்ததாக சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து இன்று வெளியான தமிழக பட்ஜெட்டில் பட்டினமருதூரில் புதியதாக தொல்லியல் அகழாய்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 31 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஜெனரிக் சித்தா ஆயுர்வேதம் என அனைத்து வகை மருந்துகளும் சந்தை விலையை விட 20 முதல் 90% வரை குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன. மேலும் 25 சதவீதம் வரை கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தோழி’ மகளிர் விடுதிகள் கட்டப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன் மூலம் படிக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்கள் பயன் அடைவார்கள்.
2025-26ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், மூன்றாம் பாலினத்தவர்க்கு உரிய பயிற்சி வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவர்களை கொண்டு சென்னை தாம்பரம் ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில், சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்தாண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9335 கோடி ஒதுக்கீடும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் சட்ட பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அதில், தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூரில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்காக நிதி ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். *தென்காசி மாவட்டத்தின் புதிய வருகையை மக்களுக்கு ஷேர் செய்து தெரியபடுத்தவும்*
2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶நீலகிரியில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்
▶நீலகிரியில் வேட்டை தடுப்பு ஆராய்ச்சி மையம்
தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கிய சாலையில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் இரவு 8-மணியளவில் குளிர்சாதன பெட்டியில் ஐஸ் கிரீம் எடுக்க முற்பட்டபோது எதிர்பாராதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு சிறுமியை தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். இது குறித்து செம்பனார்கோவில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சோமு (சோமசுந்தரம்) எம்.கே. பாலன் கொலை வழக்கில் கடந்த 2001ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த அவர், 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக உருவெடுத்து தலைமறைவாகி இருந்து வந்துள்ளார். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.கே.பி.நகரில் உள்ள முல்லை நகர் பகுதியில் போலீசார் துப்பாக்கி முனையில் அவரை இன்று (மார்.14) கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.