Tamilnadu

News March 15, 2025

புதுச்சேரியில் புதிய பஸ் நிலையம் திறப்பு

image

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி ரூ. 29 கோடியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவு பெறும் நிலையில் திட்டமிடு ரூ.34 கோடியாக உயர்ந்து விட்டது. பஸ் நிலைய கட்டுமான பணி காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ரோடியர் மில் திடல் தற்காலிக பஸ் நிலையமாக செயல்பட்டது மேலும் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் வரும் மார்ச் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

News March 15, 2025

தென்காசியில் வேலை வாய்ப்பு முகாம் – கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமானது மார்ச் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் நேற்று(மார்ச் 14) செய்தி வெளியிட்டுள்ளார். SHARE IT.

News March 15, 2025

திருப்பூர்:பின்னலாடை தொழிற்கான அறிவிப்பு எதுவும் இல்லை

image

தமிழக அரசு பட்ஜெட்டில் பின்னலாடை தொழிலுக்கான அறிவிப்பு இடம்பெறாததால் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில கோரிக்கையின் போது திருப்பூருக்கு ஏதாவது அறிவிப்பு வருமா என தொழில் துறையினர் காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்தமாக தொழில்துறைக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள பட்ஜெட்டாக இருக்கிறது. ஆனால் தனியாக பின்னலாடை தொழிலில் உள்ள நிறுவனங்களின் கோரிக்கைகள் இடம் பெறவில்லை என தெரிவித்தனர்.

News March 15, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை இணைய பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் முன்பின் தெரியாத நபர்களிடம் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் அனுப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் நவீன முறையில் இது போன்ற பணம் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை கூறப்பட்டுள்ளது.

News March 15, 2025

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை

image

வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக்குமார் (29) இவர் கடந்த 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தனர். வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த வழக்கில் அசோக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் நேற்று (மார்ச்.14) உத்தரவிட்டார்.

News March 15, 2025

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

image

அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்த மோசஸ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அப்பெண் விலகியிருக்கிறார். பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து பெண்ணின் உறவினருக்கு அனுப்பியதோடு, அதனை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதால் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

News March 15, 2025

ராமநாதபுரத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், மாவட்ட பார்வை தடுப்பு சங்கத்தில் காலியாக உள்ள பணியியங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கங்களை ramanathapuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்கலாம். SHARE IT

News March 15, 2025

வெறிநாய் கடித்ததில் தொழிலாளி பலி

image

செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர், பெங்களூரில் கூலி வேலை செய்து வந்த நிலையில்,விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அவரை வெறிநாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,அவா் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் முதலுதவி பெற்றுவிட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் நேற்று (மார்ச்.14) உயிரிழந்தாா்.

News March 15, 2025

கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

கரூரில் IT, Customer Care, Data Entry, பல வேலைகள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் போலி ஏஜெண்டுகளிடம் நம்பி ஏமாறாமல் உண்மை தன்மையை உறுதி செய்யவும். போலியான ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு சென்று சைபர் அடிமைகளாக மாறிவிடாதீர்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டு தெரியவந்தால் சைபர் க்ரைம் காவல் நிலையம் எண் 04324-299411 புகார் அளிக்கவும் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

முன்னீர் பள்ளத்தில் தொழிலாளி குத்திக் கொலை

image

முன்னீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த தொழிலாளி மாரியப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவருக்கும் இடையே மது வாங்கி குடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இசக்கிராஜ் கத்தியால் மாரியப்பனை வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!