Tamilnadu

News March 15, 2025

10 சவரன் செயினை திருடிய மர்ம நபர்கள்

image

அம்பூர்பேட்டையைச் சேர்ந்த ஷீலா (60), தனது மருமகள் சிந்து (34) உடன் நேற்று முன்தினம் (மார்.13) இரவு ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

News March 15, 2025

அரியலூர்: விவசாயிகள் உதவித்தொகை பெற இது கட்டாயம்

image

மத்திய அரசு வழங்கும் பிரதமர் கௌரவ உதவித்தொகை உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இணையவழியில் பதிவு செய்து, தேசிய அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு 20-வது தவணை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே தேசிய அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். SHARE IT NOW

News March 15, 2025

நாகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் 3 மணிவரை நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10000க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் <>லிங்க்<<>> இந்த இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News March 15, 2025

தருமபுரி மக்களின் 84 ஆண்டு கால கனவு: அன்புமணி கேள்வி

image

தருமபுரி – மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் என்ன சிக்கல்? 6 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அறிக்கையில், நிலங்களைக் கையகப்படுத்தாததற்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. தேவையான நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

News March 15, 2025

சேலம் ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் குரூப்

image

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலம் ரயில்வே போலீசார் வாட்ஸ் அப் குழுவை (94981-01963) அறிமுகம் செய்துள்ளனர். மேலும் “அறிமுக இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவு பொருள்களை வாங்கி உண்ண வேண்டாம். நகை அணிந்து கொண்டு உறங்க வேண்டாம். சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் 139, 1512 அல்லது 9962500500 அழைக்கவும்” என தெரிவித்துள்ளனர். இதை ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 15, 2025

இளைஞர் கொலை வழக்கு, 16 ஆண்டுக்கு பிறகு தண்டனை

image

தாராசுரம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், கடந்த 2009 ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா கொலை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகிய 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ. 3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News March 15, 2025

மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

மதுரை வில்லூர் ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன் (50). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இருளாயி (9) என்ற மகள் இருந்தார். கடந்த 2018ல் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து அவ்வப்போது தனது தாய்வழி தாத்தாவிடம் தெரிவித்தாக மகள் இருளாயியை அவரது தந்தை முருகன் கோடாரியால் தாக்கி கொலை செய்தார். இவ்வழக்கில் தந்தை முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 15, 2025

மாடியிலிருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவர்!

image

சமயபுரம் அடுத்துள்ள தனியார் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஓருவர் 4வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விழுந்தது குறித்த தகவல் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 15, 2025

முதியவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு

image

செய்யூர் அருகே செங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாத்தியநாதன் (65), மாடு மேய்க்கச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிச் செல்ல, அவரது ஆடைகள் சாலை ஓரமான கிணற்றில் காணப்பட்டதால், செய்யூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் தேடுதல் நடத்தியதில், அடுத்த நாள் (மார்ச்.14) காலை அவரது உடல் மீட்கப்பட்டது. செய்யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 15, 2025

ஆற்றங்கரை ஓரம் எலும்புக்கூடு டி.என்.ஏ டெஸ்ட்

image

உரியூர் கிராமத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் நேற்று (மார்ச்.14) எலும்புக்கூடு இருப்பதாக அப்பகுதி மக்கள் தக்கோலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், டிசம்பர் 13ம் தேதி சாந்தி என்பவர் வீட்டில் இருந்து காணாமல் போனார்.அவரது எலும்பு கூடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதனால் போலீசார் எலும்புக்கூடை மீட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைத்துள்ளனர்.

error: Content is protected !!