India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் இருந்து அரியானா மாநிலம், ஹிசார் ரயில் நிலையத்திற்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் (22475/ 22476) இன்று (மார்ச் 15) முதல் சோதனை முயற்சியாக கர்நாடகாவின் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்.
அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி(85).விவசாயி. இவரது மனைவி பர்வதம் (75). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ் வழக்கில் உறவினரான ரமேஷ் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் கொலை செய்ததாக தெரிவித்தார்.
▶️ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.11.74 கோடியில் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய ஊக்கு விக்கப்படும்.
▶️ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நீர்வடி மேம்ப்பாட்டு திட்டத்திற்காக ரூ.286.79 கோடி ஒதுக்கீடு.
▶️ரூ.68 கோடியில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்ல் நீர்வழிப்பகுதிகளை தூர்வார, தோட்டக்கலை பயிர்கள், பண்ணைக்காடுகள் அமைக்கப்படும்.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச்.16ல் ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் ஆகியவை போத்தனூா்- இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிக நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வேளாண் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் உள்ள மலைவாழ் விவசாயிகள் நலனைக் காக்க மலைவாழ் உழவர் நலத் திட்டம் தேனி உட்பட 20 மாவட்டங்களில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ,தேனி உட்பட 20 மாவட்டங்களில் வசிக்கக்கூடிய மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக இருந்து வந்தவர் சஜி. இவர் இன்று சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொது குழுவில் பங்கேற்க சென்றிருந்தபோது மாரடைப்பினால் உயிரிழந்தார். பொறுப்பேற்று மூன்று மாதம் ஆவதற்குள் அவர் உயிரிழந்தது அவரது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74கோடி ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து உங்க கருத்துகளை கீழே பதிவிடுங்கள் .
▶️விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய ரூ.11.74 கோடி ஒதுக்கீடு.
▶️மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்திற்காக ரூ.22.80 கோடி ஒதுக்கீடு.
▶️வத்திராப், ஸ்ரீவியில் ரூ.50.79 கோடி மதிப்பில் பரிவர்த்தை கூடம், சேமிப்பு கிடங்குகள்.
▶️ நீர்வடி மேம்ப்பாட்டு திட்டத்திற்காக ரூ.286.79 கோடி.
▶️தூர்வார, தோட்டக்கலை பயிர்கள், பண்ணைக்காடுகள் அமைக்க ரூ.68 கோடி ஒதுக்கீடு.
தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 15) வேளாண்துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் அரியலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முந்திரி சார்ந்த தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட மக்களே SHARE பண்ணுங்க…
காஞ்சிபுரம், ஏனாத்தூர் அமைந்துள்ள சங்கர பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 15 சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்த உள்ளனர். வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.