India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 31 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐ ஜி எஸ்.ஆர்.சரவணன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். குஜராத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி 31ஆம் தேதி குமரியில் முடிவடைகிறது இதனை வரவேற்க அமித்ஷா வருகை தர உள்ளார்.
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (மார்ச்.15) வெளியிடப்பட்டு வருகிறது. ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி, சென்னை, கோயம்புத்தூர், மற்றும் மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு, தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது வேளாண் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், குன்னூரில் புதிதாக அரசு கலை கல்லூரி மற்றும் ஊட்டியின் மையப் பகுதியில் 52 ஏக்கரில் அமைந்துள்ள குதிரை பந்தைய மைதானத்தை ரூ.70 கோடி செலவில் பூங்கா அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நீலகிரி எம்பி, ஆ.ராசா மற்றும் தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன் ஆகியோர் நேற்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
காரைக்குடி உட்கோட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர், கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் காரைக்குடி பகுதியில் மார்ச்.18 அன்று நடைபெறவுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பழிவாங்கும் நோக்கில் ஒரு கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருந்த கூலிப்படையினரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.17,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் நெல் சேமிப்பு வளாகங்கள், 25,000 இரும்பு இடைச்செருகுக் கட்டைகள் உள்ளிட்டவை செயல்படுத்திட ரூ. 480 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
2024 -ம் ஆண்டின் உலக காற்றுத் தர அறிக்கையில், IQAir நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், குறைந்த காற்று மாசுபட்ட நகரங்களில் திருப்பூர் இடம் பெற்று தமிழ்நாட்டிலேயே திருப்பூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் திருப்பூர் தெற்கு ஆசியாவில் 15- வது இடமும், இந்தியாவில் 3-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இச்சாதனைக்கு ‘வனத்துக்குள் திருப்பூர்’ பங்கு முக்கியமானது குறிப்பிடதக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, ராசிபுரத்தை அடுத்த மங்களபுரம் பகுதியில் நாளை (16.03.2025) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் மங்களபுரம், தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 700 காளைகளும், 300 வீரர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடியலேசானது மிதமான மழையும், மார்ச் 19ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (மார்ச் 15) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி (32). இவர் இன்று (மார்.15) காலை குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டுள்ளார். தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்த்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.