India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை மார்ச் 31க்குள் சரிபார்த்து KYC முடிக்க வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட வழங்குத்துறை இன்று அறிவித்துள்ளது, மேலும் குடும்பத்தினர் அனைவரும்KYC, செய்யத் தவறினால் அவர்களுக்கு ரேஷன் பொருள் வழங்குவது நிறுத்தப்படலாம்,மேலும் அவர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருப்போரூர் அடுத்த கீழுர் கிராமத்தை சேர்ந்தவர் முணு ஆதி, 44, இவர் கடந்த 9 ம் தேதி இரவு 10:00 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படிக்கட்டு ஏறும்போது தவறி கிழே விழுந்து தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச்.15) காலை உயிரிழந்தார்.
குமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மருத்துவ அலுவலர் 5, செவிலியர் 5, பல்நோக்கு சுகாதார பணியாளர் 5, மருத்துவமனை பணியாளர் 5 என 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையவர்கள் மார்ச் 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மரம் வெட்டும் பணியின்போது 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கராஜ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீரிழிவு பாத மருத்துவ திட்டம் மூலம், அரியலூர் அரசு மருத்துவமனையில் பாத சிறப்பு சிகிச்சை பிரிவு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நீரிழிவு நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறலாமென மருத்துவமனையின் டீன் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இத்தகவலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SHARE பண்ணுங்க..
நீலகிரி: சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி – எருமாடு சாலை சுங்கம் பகுதியில் நேற்று மாலை, இப்பகுதியை சார்ந்த ஒருவரின் இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் ஒன்றிணைந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்து சேரம்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்தியாவில் கணவர் இறந்தால் மனைவியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. உடன்கட்டை ஏறும் பெண்ணின் நினைவாக சதிக்கல் நடப்பட்டன. இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவ மாணவிகள் தென்காசி ரயில் நிலையம் அருகே நேற்று(மார்ச் 15) சதிக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சதிக்கல் 200 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
#குமரியில் இன்று(மார்ச் 16) பிற்பகல் 2 மணிக்கு கல்வி மற்றும் கலை துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வடசேரியில் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா நடக்கிறது.#பிற்பகல் 2.30 மணிக்கு தெற்குச் சூரங்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.#மாலை 6 மணிக்கு தேவ சகாயம் மூன்று காற்றாடி மலை புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவையொட்டி சப்பரம் பவனி நடக்கிறது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் பல ஆயிரம் பணியிடங்கள் நிரப்படவுள்ளனர். எனவே 10-ம் வகுப்பு, பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ, டிகிரி உள்பட பல்வேறு கல்வித் தகுதி உள்ளோரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
அருள்மிகு தீர்த்த கிரீஸ்வரர் திருக்கோவில், இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம், வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது, இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற மலை தீர்த்தமலை ஆகும். இம்மலை இன்றளவும் சுற்றுலா பயணிகளை வியப்படைய வைக்கும் ஓர் அற்புத தளமாகவே உள்ளது.
Sorry, no posts matched your criteria.