Tamilnadu

News March 16, 2025

சொத்து வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்

image

கோவை மாநகராட்சியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை, சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.473.77 கோடி வசூலிக்க வேண்டும். நேற்று வரை, ரூ.398.20 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.75.57 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகையை வசூலிக்க மாநகராட்சியில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் வரியை செலுத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.

News March 16, 2025

வேலைவாய்ப்பு சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு

image

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மார்ச்.31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

கரூரில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்

image

கரூர், இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளுக்கான அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்கு கரூர் உள்ளிட்ட 15 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் ஆகிய பிரிவுகளுக்கு ஆன்லைனில்<> www.joinindianarmy.nic.in<<>> என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதை ஷேர் செய்யுங்கள்.

News March 16, 2025

தூத்துக்குடி நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் வேலை!

image

தூத்துக்குடி நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிசர்-7, ஸ்டாஃப் நர்ஸ்-7, ஹெல்த் இன்ஸ்பெட்கடர்-7, சப்போர்ட் ஸ்டாஃப்-7 பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்களை <>thoothukudi.nic.in<<>> என்ற இணையதள பக்கத்தில் பெறலாம். சம்பளம்: ரூ.60 ஆயிரம் வரை. விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.03.2025. நண்பர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க.

News March 16, 2025

டெங்கு காய்ச்சலால் 9-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு

image

வேலூரில் முடினாம்பட்டு கிராமத்தில் சிவானி என்ற 13 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுநீரகம், கணையம் மற்றும் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2025

கடலூரில் இப்படி ஒரு இடமா?

image

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மாங்க்ரோவ் காடுகள் எனும் சதுப்பு நில காடுகள் 1350 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் 2ஆவது சதுப்பு நிலக் காடுகள் என்ற பெருமைக்கும் உரியதாகும். வனத்துறை சார்பில் படகுகளும் இங்கு இயக்கப்படுகின்றன. ஒருமுறை இங்கு சென்று விசிட் அடியுங்கள்..அந்த அனுபவமே அலாதியானது. இயற்கை விரும்பிகளுக்கு SHARE பண்ணுங்க..

News March 16, 2025

தேனியில் ஐந்து இடங்களில் தரைப்பாலம் அமைகிறது!

image

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ராஜவாய்க்கால் பகுதியில் ரூ.2.26 கோடி மதிப்பில் துார்வாரும் பணியை நகராட்சி துவங்கி உள்ளது. இந்த வாய்க்காலில் 5 இடங்களில் தரைப்பாலம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 95 மீ., நீளம், 9 மீ., அகலம், 3 மீ., ஆழத்திற்கு துார்வாரும் பணிகள் நடக்க உள்ளது. மொத்தம் ஐந்து இடத்தில் தரைப்பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது.

News March 16, 2025

நீலகியில் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

உதகை அன்னமலை முருகன் கோயில். கூடலூர் ஸ்ரீ சவுத்ரா மாரியம்மன் கோயில். குன்னூர் சிவன் கோயில். மஞ்சக்கம்பை நாகராஜர், ஹெத்தையம்மன் கோயில். கோத்தகிரி சக்திமலை சிவன் கோயில். கூடலூர் சந்தனமலை முருகன் கோயில். நம்பலாக்கோட்டை கோயில். ஒட்டுப்பட்டறை முத்தாலம்மன் கோயில். குன்னுர் துர்க்கையம்மன் கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.

News March 16, 2025

தீராத நோயை தீர்க்கும் கஞ்சமலை சித்தேசுவரசாமி கோயில்

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.”அமாவாசை கோயில்’ என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்தால் நலம் பெறலாம் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 16, 2025

திருச்சி: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!