India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் திமுக மற்றும் தட்டாஞ்சாவடி திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 72ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொது கூட்டம் வரும் 20ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 06.00 மணியளவில் சாரம் அவ்வை திடலில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக தமிழக கழக அமைப்பு செயலாளர் கோ.பாரதி சிறப்புரை வழங்குகிறார். புதுச்சேரி திமுக கழக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில், உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பட்டியலை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி ஊரகப்பகுதி, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய உட்கோட்டங்களில், ரோந்து பணிகள் மேறிகொள்ளப்படுகின்றன. இந்த பணிகளில் தாழையூத்து, களக்காடு, வள்ளியூர், வீரவல்லூர் காவல் ஆய்வாளர்களும், கல்லிடைக்குறிச்சி உதவி காவல் ஆய்வாளர்களும் ஈடுபடுகின்றனர்.
சிவகாசியில் நாளை (18.03.2025) மின் நுகர்வோர் கூட்டம் நடைபெற உள்ளது. மின்செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகம் சார்ந்த குறைகளை நேரிலோ அல்லது மனுவாகவோ வழங்கி தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இன்று (மார்ச்.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 17.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்ட ஊரக பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று மார்ச் 17 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்.
Sorry, no posts matched your criteria.