India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார்( 9). அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர், அவரது நண்பருடன், அருகில் உள்ள குளத்தில் குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சரத்குமார் திடீரென நீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார். ரிஷிவந்தியம் போலீஸ் விசாரிக்கின்றனர்.
கடந்த 2023ல், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் குன்னூர் மலை ரயில் நிலையத்தை புதுப்பித்து பொலிவு படுத்தும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், மோடி, வரும் ஏப்ரல் 1-ம் தேதி குன்னுார் மலை ரயில் நிலையம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களை துவக்கி வைக்க உள்ளார். இதனால், மலை ரயில் நிலையம், புதுப்பொலிவு படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.3.2025 அன்று நடக்கிறது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவுள்ளது. அதனால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE NOW
நாகை, திருமருகல் வட்டாரத்தில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி முடிந்து பின் வயல்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவம் தவறிய மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளாலும், பூச்சி நோய் தாக்கப்பட்டாலும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.956 பிரீமியமாக செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் தொகை செலுத்த வருகிற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களிடம் குடும்பத்தினர் நலனுக்காக சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் (20.03.2025) அன்று முற்பகல் 11.00 மணிக்கு தென்காசி மலையான் தெருவில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில், மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த மகேந்திரா ராஜா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபடி டி,என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவரிடம் திருவாரூரை சேர்ந்த ரம்யா என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சமும், இவரது தம்பி முரளிக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.4.5 லட்சமும் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து சாத்தூர் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, காவல் உதவி செயலியின் மூலம் ஸ்மார்ட்போனை பாதுகாவலனாக மாற்ற கூறியுள்ளது. குறிப்பாக பெண்கள் காவல் உதவி செயலியை இன்றே பதிவிறக்கம் செய்ய வேண்டும். Download link:https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi இதில் பதிவிறக்கலாம்.
கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று(மார்ச்.17) திடீரென பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அடுத்த இரு நாள்கள்( நாளை, நாளை மறுநாள்) மிதமான மழை இருக்கும் என TNAU காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கோவை மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். Share பண்ணுங்க
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் இன்று(மார்ச் 18) 12:15 முதல் 12:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக இன்று அதிகாலை 4:00 மணிக்கு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கின்றனர். எனவே இன்று அதிகாலை முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு இரவில் திரும்பும் வரை நடை சாத்தப்படும்.
புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஆயிஷா (19) கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ம் தேதி கல்லூரியின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்தார்.ஆயிஷாவின் சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்ததும், அவரது இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாத ஆயிஷா, தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.