India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கே.கே.நகரில் கணவன் உயிரிழந்த சில நிமிடங்களில் மனைவியும் உயிரிழந்தார். ஜீவானந்தம் தெருவில் மூர்த்தியும் (72) அவரது மனைவி (61) சாந்தியும் தனியாக வசித்து வந்தனர். கணவன் சுயநினைவின்றி மூர்ச்சையானதால் பக்கத்து தெருவில் வசிக்கும் மருமகன் கார்த்திக்கு சாந்தி தகவல் அளித்துள்ளார். அவர் வந்து பார்க்கும் போது கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள், மாணவர்களுக்கான முன்னறிவிப்புகள், மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் உட்பட, நாகை மாவட்டத்தில் என்ன நடக்கிறது? என அறிந்து கொள்ள @nagapattinam – Collector என்ற முகவரியில் பேஸ்புக், யூடியுப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ள சமூக வலைதளங்களில் பின்பற்றுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க..
திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.24ஆகும். <
சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் (மார்ச்17) மைதானத்தில் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுப்பட்டுவருகின்றனர்.
நெல்லை மாநகர டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்த பள்ளிவாசல் முத்தவல்லி ஜாகிர் உசேன் பிஜிலி இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் முன்னாள் காவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மேலும் கருணாநிதி ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் தனி பிரிவு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். மார்ச் 31க்குள் நகராட்சிக்கு கட்டவேண்டிய வரி பாக்கியை செலுத்த வேண்டும். 25 ஆயிரத்திற்கு மேல் வரி பாக்கி உள்ளவர்களின் சொத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.
#குமரியில் இன்று(மார்ச் 17) காலை 10 மணிக்கு EPF பென்ஷன் குறைந்தபட்சம் 5,000 வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மத்தூர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 4 மணிக்கு பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சித்த மருத்துவக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயுஷ் பிரிவின் கீழ் ஆயுஷ் மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நலச் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி சித்த மருத்துவம், யோகப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் மார்ச்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை இங்கு <
ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். <
ஆரணி ஆரணி பாளையம் சந்தா தரவை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ரமேஷ் என்பவரை நேற்று ஆரணி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கணேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.