Tamilnadu

News March 18, 2025

மும்பை இந்தியன்ஸ் உடன் மோதல் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள்

image

சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் (மார்ச்17) மைதானத்தில் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 18, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 18) 28.49 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.20 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 60 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 28 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 18, 2025

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்: அமைச்சர்

image

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி நேற்று சட்டசபையில் பேசியதாவது, குற்றாலத்தில் இரவு பகல் என அனைத்து நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக இரவு 7 மணி முதல் அனுமதி மறுக்கப்படுகிறது என்றார். பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், குற்றாலம் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

News March 18, 2025

இளம் வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நீலகிரி ஆட்சித் தலைவரின் தலைமையில் அரசு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு குழு உருவாகிறது.இளம் வல்லுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் (RESUME) வரவேற்கப்படுகிறது. ddsooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.3.2025குள் அனுப்பவும்,தொடர்பு விவரங்களுக்கு கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News March 18, 2025

சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை சேலம் மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து வரும் மார்ச் 24- ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மைக் கட்டிட வளாகம், சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News March 18, 2025

நாமக்கல் அரசு வேலை வேண்டுமா? இங்கு போங்க

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்விற்கு, வரும் 25-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது
இந்த வகுப்பானாது காலை 10.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணுக்கு  அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  போட்டித்தேர்விற்கு தயாராகும் உங்களது நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள். 

News March 18, 2025

சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடாது

image

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி உயர்வுக்கேற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி ஆட்டோ சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் 1.5 கி.மீ.க்கு ரூ.50, அடுத்தடுத்த கி.மீ.க்கு ரூ.25 என நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் மார்ச் 19ஆம் தேதி தொழிற்சங்கம் போராட்டத்தை அறிவித்தது.

News March 18, 2025

சோழர்களின் குலதெய்வம் தெரியுமா?

image

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலயன், தன் குலம் தழைக்கத் தஞ்சாவூரில் நிசும்பசூதனி எனும் தேவியை பிரதிஷ்டை செய்தார். தற்போது, நிசும்பசூதனி தேவி, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் வடபத்ரகாளி கோயிலில் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுமார் 7 அடி உயரமுள்ள நிசும்பசூதனியின் திருமேனி எட்டுக் கரங்களோடு காணப்படுகிறது. ஒருமுறை இங்கு சென்று வாருங்கள்..தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்

News March 18, 2025

சென்னையில் கார் வாங்குபவர்களின் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் வாகன நிறுத்த தேவையை அறிந்து மேலாண்மை செய்யும் வகையில் வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இதனால், பொதுமக்கள் கார்களை வாங்கும் போது வாகன நிறுத்தச் சான்று கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 18, 2025

இத பண்ணாட்டி ரேஷன் அட்டை நீக்கம்

image

ஈரோடு மாவட்டத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் முன்னுரிமையுடைய குடும்ப அட்டை உறுப்பினர்கள் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையை வரும் 31ம் தேதிக்குள் அந்தந்த ரேஷன் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, ஈரோடு மக்களே மிஸ் பண்ணிடாதீங்க. ரேஷன் அட்டை முக்கியம். (  Share பண்ணுங்க)

error: Content is protected !!