Tamilnadu

News March 18, 2025

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில், உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, பங்குனி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பஞ்சாமிருதம் ,பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

News March 18, 2025

துவரங்குறிச்சி: கிணற்றில் கிடந்த முதியவரின் உடல்

image

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள தாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கண் (75). இவர் காலை அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்றபோது தவறி நேற்று இருந்துள்ளார். பின்னர் ஊர் மக்கள் தகவல் தெரிவித்து அதன் பெயரில் தீயணைப்புத் துறையினர் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் சோதனையில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டது.

News March 18, 2025

போலி கடன் செயலிகள் மோசடி காவல்துறை எச்சரிக்கை

image

செயலியை பதிவிறக்கம் செய்யும்போது குறுஞ்செய்திகள் , Contact Access, Galary Access மற்றும் Location போன்றவற்றிற்கு கண்மூடித்தனமாக ஒப்புதல் அளிக்கின்றனர். இதனால் பயனரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு சைபர் குற்றவாளிகள் மிரட்டுகின்றனர். குறிப்பாக புகைப்படங்கள் நிதி மோசடி புகார்களுக்கு 1930என்ற எண்ணை அழைக்கவும், சைபர் குற்ற புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.

News March 18, 2025

கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் ஆட்சியரிடம் புகார்

image

அதிகாரிகள் சொல்வதை கேட்க மறுக்கும் கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்களுக்கு எதிராக செயல்படும் அரசு கேபிள் டி.வி.அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகூர் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்ட புதிய கேபிள் டி.வி.ஆப்ரேட்டர் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என 100க்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் நாகை ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.

News March 18, 2025

நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு

image

குமரி – கேரள எல்லை பகுதியான பழுகலில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கேரள – தமிழக போலீசார் விசாரணை நடத்தி, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நிதி நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டன. தற்போது இந்த வழக்கை கேரள அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.

News March 18, 2025

தென்காசி புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு எப்போது?

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா சட்டசபையில் பேசியபோது தென்காசி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அதை திறக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியும், அது தொடர்பான வழக்கும் முடிந்த பின்னர் திறக்கப்படும் என்றார்.

News March 18, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (18-03-2025) நிலவரப்படி, கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ.106-க்கும், முட்டை கோழி கிலோ (உயிருடன்) ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை விலையைப் பொறுத்தவரையில், ரூ.3.90 ஆக இருந்த முட்டை விலை நேற்று 10 காசுகள் உயர்ந்து ரூ.4 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (மார். 18) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

நெல்லை முதல் பெண் அதிகாரி பதவி ஏற்பு

image

தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் திருநெல்வேலி மாவட்ட முதல் முதல் பெண் மாவட்ட அலுவலர் ஆவார். இந்நிலையில் இன்று அவர் பாளையங்கோட்டை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். முதல் பெண் அதிகாரியான அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 18, 2025

10th பொதுத்தேர்வு: குமரயில் 22,044 பேருக்கு ஹால் டிக்கெட்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தேர்வினை 22 ஆயிரத்து 44 மாணவ மாணவிகள் எழுதியிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம் நேற்று(மார்ச் 17) தொடங்கியது.

error: Content is protected !!