Tamilnadu

News March 18, 2025

பெரம்பலூர்: இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த நபர்

image

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே எம் ஜி ஆர் நகர் பகுதியில் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (30) என்ற  ஆண் ஒருவர் வாடகை குடியிருப்பு வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நிலையில், மது போதையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வருகிறது.

News March 18, 2025

குமரியில் திருமணத்தடை நீங்க செல்ல வேண்டிய கோயில்

image

குமரி, கருங்கல்லில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பகவதி அம்மன் கோவில் உள்ளது. தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 10 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த பகவதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறி கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், சுயம்வர அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும்.*SHARE TO FRDS

News March 18, 2025

விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப பிரார்த்தனை

image

விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல்வேறு தடைகள் ஏற்பட்டனஇந்நிலையில் இருவரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிட பிரார்த்தனை செய்து ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கிராம மக்கள் வேண்டுதலுடன் கூடிய பிளக்ஸ் போர்டுகள் வைத்து வரவேற்கின்றனர். இப்படி ஒரு பிளக்ஸ் போர்டு நீங்கள் பார்த்ததுண்டா? இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 18, 2025

நீலகிரியில் மலைப் பயிர்கள் கண்காட்சி

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தண்ணீரு இன்று வெளியிட்ட கோடை விழா தேதி அறிவிப்பில் இறுதி விழாவாக, இந்த ஆண்டில் முதல் முறையாக குன்னூரில் மலைப் பயிர்கள் கண்காட்சி காட்டேரி பூங்காவில் மே 31 முதல் ஜூன் 1-ம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது. காட்டேரி பூங்காவானது குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 

News March 18, 2025

திருச்சி மாவட்ட மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி செலுத்தாதவர்கள் தாமதமின்றி வரிகளை செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் அனைத்து கிராம பொதுமக்களும் ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ, வரி வசூல் முகாம்களிலோ அல்லது https://vptax.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கடன் அட்டை மூலம் வரிகளை செலுத்தலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE 

News March 18, 2025

கோவையில் ஆரஞ்சு நிறத்தில் தவளை

image

கோவை தடாகம் சாலை, கோவில்மேடு அருகே, கல்யாணி நகரில் உள்ள வயல்வெளியில், நேற்று (மார்ச்.17) ஆரஞ்சு நிறத்தில் தவளைகள் தென்பட்டதால், அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் சிலர், அந்த தவளைகளை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

News March 18, 2025

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர் மீது புகார்

image

அரூர் அடுத்த எலவடை கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவரை கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் திருமணம் நிலையில், ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் திருமூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததும், மூன்றாவதாக 17 வயது பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. திருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் பிரியதர்ஷினி மனு அளித்தார்.

News March 18, 2025

விருதுநகர் மாவட்டத்தில் உயிரியல் தேர்வை புறக்கணித்த மாணவர்கள் 

image

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 1 பொதுத் தேர்வில் உயிரியல் தேர்வினை 3149 மாணவர்களும் 4928 மாணவிகளும் ஆக மொத்தம் 8077 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 7965 பேர் தேர்வு எழுதிய நிலையில் 112 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதே போல் தாவரவியத் தேர்வில் 78 பேரும் வணிக கணக்கியல் தேர்வில் 6 பேரும் வரலாறு தேர்வில் 176 பேரும் பங்கேற்கவில்லை.

News March 18, 2025

திண்டுக்கல்: இறந்த கணவருக்கு மகளிர் உரிமை தொகை

image

திண்டுக்கல்: குஜிலியம்பாறை தாலுகா கருங்கல் ஊராட்சி செட்டியூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் இறந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில் இவரது மனைவி காளியம்மாளுக்கு கிடைக்க வேண்டிய மகளிர் உரிமைத்தொகை அலுவலர்களின் குளறுபடியால் கடந்த ஆறு மாதங்களாக இறந்துபோன இவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு பி.எஸ்.சி., – எம்.எஸ்.சி., நர்சிங் பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தாட்கோ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். 2 மாதம் அளிக்கப்படும். விடுதி கட்டணத்தை தாட்கோ அளிக்கும் என கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!