Tamilnadu

News March 18, 2025

தென்காசி மாவட்ட காவலர்கள் ரோந்து பணி

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 18.03.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.

News March 18, 2025

புதுவை: மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

image

புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு. மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் இன்று 18-3-25 இரவு 8 மணியளவில் கடந்த 2 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.. இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவு நிற்கின்றன.

News March 18, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம் வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

ராணிப்பேட்டை: இணையதள மோசடிகளை தடுக்க உதவி எண் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை: இணையதளம் மற்றும் செல்போன் மூலம் பண பரிவர்த்தனையில் ஏற்படும் மோசடிகளை தடுக்க ராணிப்பேட்டை காவல்துறை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உதவி எண் 1930 அறிவித்துள்ளது. இதில் பண பரிவர்த்தனையில் ஏற்படும் மோசடிகள், சந்தேகத்துக்கு உரிய போன் அழைப்புகள் குறித்து புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை காவல்துறை தெரிவித்துள்ளது.

News March 18, 2025

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 18.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 18, 2025

குறைகளை களையும் குமரன்

image

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை, குறைகளை களையும் வகையில் இத்தலத்தில் தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். ஷேர் செய்யவும்.

News March 18, 2025

31.03.2025 க்குள் வரிகளை செலுத்த ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 208 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் 2024-25 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், வர்த்தக உரிமம் மற்றும் தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் 31.03.2025-க்குள் செலுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News March 18, 2025

இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில், தங்களது பகுதியில் இன்று, 18.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், சேவூர், மடத்துக்குளம், குண்டடம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 18, 2025

திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

image

ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு குற்றத்தில் கைது செய்யப்பட்ட ராணிப்பேட்டை காரை கிராமத்தைச் சேர்ந்த இமானுவேல் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் சந்திரகலா குற்றவாளி இமானுவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.

News March 18, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி என பெற தகுதி உள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம் மேலும் தகவலுக்கு 9445029470 எண்ணை அழைக்கலாம் என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!