India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநிலங்களவையில் அமைச்சக மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, “தென் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் சரியான முறையில் அனுப்பப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் எந்த ஒரு புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் சரியான அளவில் பொருட்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (மார்ச்.19) குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை புகாராக அளிக்கலாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச்.18) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் நில உரிமையாளர்கள் நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில் நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்யப்படும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச்.18) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மார்ச் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் விவசாயிகள் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து அதற்குரிய தீர்வு பெறலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட தல்லாகுளம் தெப்பக்குளம் அவனியாபுரம் தெற்கு வாசல் திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான விவரங்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.