Tamilnadu

News March 19, 2025

சேலம் GH-ல் பாலியல் தொல்லை? 3 மணி நேர தொடர் விசாரணை

image

சேலம் அரசு மருத்துவமனையில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றிய 30 வயது பெண்ணுக்கு, ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கலெக்டர் மற்றும் கமிஷனரிடம் புகார் வழங்கப்பட்டது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் திருவிழா

image

மதுரை மேலூர் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் கொப்புடாரி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 4 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்து படையலிட்டனர். மேலுார் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2025

நீலகிரியில் ஒப்பந்தப் பணிகளை நிறுத்த முடிவு

image

நீலகிரி மாவட்ட கட்டுமான தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், குன்னூரில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானத்தில், கொண்டுவரும் ஜல்லி உள்ளிட்டவைகளுக்கு ஏற்பட்ட திடீர் விலை உயர்வை கண்டித்து, வரும் ஏப்ரல் 1ல், அரசு ஒப்பந்த பணிகள் நிறுத்த ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்துள்ளனர்.

News March 19, 2025

நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் பலி

image

கள்ளிக்குடியை சேர்ந்த ராகுல்(20), மையிட்டான்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(21) ஆகியோர் முட்டை வண்டியில் லோடு மேனாக பணியாற்றி வந்தனர். நேற்று காலை இருவரும் விருதுநகரில் நண்பர்களை பார்த்து விட்டு கள்ளிக்குடி நோக்கி டூவிலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வடமலைக்குறிச்சி அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் டூவிலர் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் கார்த்திக் ராஜா உயிரிழந்தார்.

News March 19, 2025

இலங்கை போலீசார் வழக்கு ஒத்திவைப்பு

image

இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் 26.08.2020 அன்று இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றிய வழக்கில் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றிய பிரதீப்குமார் பண்டாரா தமிழகத்திற்கு அகதியாக தப்பி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் திருச்சி முகாமில் இருக்கும் நிலையில் நேற்று நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் விசாரணையை ஏப்.5 க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

News March 19, 2025

தென்காசியில் இன்று ‘GEM PORTAL’ பதிவு முகாம்

image

தென்காசி மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர், விவசாய பெருமக்கள், வணிகர்கள், தங்களது நிறுவனங்களை ‘GEM PORTAL’-லில் பதிவு செய்வதற்கான முகாம் இன்று(மார்ச் 19) மாவட்ட தொழில் மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்வது, தங்களுடைய வியாபாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேவையான பொருட்களை விநியோகிக்க உதவும் என தொழில் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News March 19, 2025

போலியான செயலி மூலம் அனுப்பி பண மோசடி

image

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தற்போது மொபைல் போன் மூலமாக வாட்ஸ்அப் குரூப்களில் உங்களது வங்கி செயலி போல் போலியான செயலி அனுப்பி அதன் மூலம் பண மோசடி நடைபெறுகிறது.வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும் என வங்கி லோகோ உடன் வரும் மெசேஜை நம்பி கிளிக் செய்யக்கூடாது. இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபர் க்ரைம் இணையதளம் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News March 19, 2025

ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழி தேரோட்டம் 2025 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உடனிருந்தார். மேலும், இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 19, 2025

பக்தரின் இறப்பிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஸ்படிக லிங்க தரிசனத்திற்காக இன்று அதிகாலை வரிசையில் நின்ற ராஜஸ்தானைச் சேர்ந்த துறவி ராஜ்தாஸ் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவரது இறப்புக்கு நீதி கேட்டு, இந்து முன்னணி சார்பில், ராமேஸ்வரம் என் எஸ் கே வீதியில் (மார்ச்.20) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

image

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கண்டித்து தமிழக முழுவதும் இந்திய மாதர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!