India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின்,லிங்கேஸ் தம்பதியினர். இவர்களது மூத்த மகன் ஆதீஸ்வரன் 16, திருப்பாச்சேத்தி அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விளையாட்டில் ஏற்பட்ட தகராற்றில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 4 பேர் ஆதீஸ்வரனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
சேத்துப்பட்டு அருகே உள்ள பெரணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (48) என்ற விவசாயி. இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு 22.03.2025 மற்றும் 23.03.2025 ஆகிய நாட்கள் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <
புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி பகுதியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் தென்கோடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன்( 22); இவர் 17 வயது சிறுமியை காதலித்து கடத்திச் சென்று, திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அர்ஜூனை போலீசார் தேடி வருகின்றனர்.
நவல்பூர், மசூதி தெருவை சேர்ந்தவர் தனபால் (50). தேநீர் கடை தொழிலாளி. இவர், திங்கள்கிழமை (மார்ச் 17) வி.சி மோட்டூர் பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்ட சிறுமியின் பெற்றோர் அவரை துரத்தி பிடிக்க முயற்சி செய்தும் முடியாததால். காவல்துறையில் புகார் அளித்தனர், இதையடுத்து தனபாலை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீஸார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
பவானியில் சில நாட்களுக்கு முன் உடல்முழூவதும் கல் கட்டிய நிலையில் சடலத்தை போலீசார் கைப்பற்றினார். விசாரணையில், இறந்தவர் மதியழகன் என்பவதும் மது போதையில், தாயின் சொத்துகளை விற்ற பணத்தை கேட்டு துன்புறுத்தியதால் தனது மூத்த மகனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. மதியழகனின் மனைவி கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பழி தீர்க்க அவரது உறவினர்களிடம் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
நேற்று சட்டசபையில் கடல் அரிப்பால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு புதுச்சேரியில் 24 கி.மீ., துாரம் உள்ள கடலோர பகுதிகளை பாதுகாக்க இ-ஷோர் திட்டத்தின்கீழ் ரூ. 1,000 கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சேர்த்து தான் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த 13வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன், அப்பகுதியில் நடந்த திருவிழாவிற்கு சென்றார். அங்கு பாண்டித்துரை என்பவர் பேச்சுக் கொடுத்துள்ளார். பின் பைக்கில் அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து போக்சோவில் கைது செய்துள்ளனர்.
அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன வளாகத்தில் மார்ச் 21இல் தொடங்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி, தெலங்கானா, உத்தரகண்ட், பீகார், சிக்கிம், இமாச்சலம், மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட 20 மாநிலங்களை சேர்ந்த 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.