Tamilnadu

News March 19, 2025

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னையில் ரூ.2000 பஸ் பாஸ் பெற்று இனி ஏசி பேருந்துகளிலும் பயணிக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.மேலும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 225 ஏசி மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை ரூ.1000 பாஸ் மட்டுமே இருந்து வந்தது.ஆனால் அதில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது.

News March 19, 2025

இளைஞர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி

image

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம், முதன்மை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வங்கி, நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் அரசு 12 மாத கட்டணமில்லா பயிற்சி வழங்குகிறது. படித்த 21 – 24 வயது வரை உள்ள மாணவ-மாணவியர் https://pminternship.mca.gov என்ற இணையதள முகவரி வாயிலாக வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News March 19, 2025

கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

image

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் சரவணன், டெலிவரி வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மதியம் மத்துார் பகுதியில் கொரியர் கொடுக்க பேருந்தில் சென்றார். மத்துார் ரயில்வே கேட் அருகே இறங்கி நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு,மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். 

News March 19, 2025

கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 16 காலிப்பணியிடங்கள்!

image

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவ சேவை நிலையங்களில் பணிபுரிய மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர், செவிலியர் அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 16 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 24.3.2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே <>கிளிக் <<>>செய்யவும்.

News March 19, 2025

அலைபேசியில் பேசியபடி 3 வது மாடியில் தவறி விழுந்தவர் பலி

image

தேனி, டி.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி 40.முன்னாள் ராணுவ வீரர். மனைவி அருள்மொழி 35. இரு மகள்கள் உள்ளனர். இவர் மாடியில் இரவு உணவு சாப்பிடுவது வழக்கம்.இந்நிலையில் மார்ச் 15ம் தேதி இரவு மனைவி அருள்மொழி மாடிக்கு உணவை எடுத்துச் சென்று பார்தத் போது அலைபேசியில் பேசியபடி 25 அடி உயரத்திலிருந்து வெற்றி தவறி கீழே விழுந்தது தெரிந்தது. தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா விசாரிக்கிறார்.

News March 19, 2025

பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

image

செங்கல்பட்டு அருங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி.இவர் கடந்த 11-ந்தேதி தனது நிலத்திற்கு இலவச பட்டா பெறுவதற்கு வி.ஏ.ஓ சக்குபாய் என்பவரை அணுகியுள்ளார்.ஆனால் சக்குபாய் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து தேன்மொழி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.அதன்படி ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற வி.ஏ.ஓ சக்குபாய் மற்றும் உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

News March 19, 2025

கிராம சபை தேதி மாற்றம்

image

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாக அரசு அறிவித்தது. அதன் பின் நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால், மார்ச் 23ம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை, மார்ச் 29ம் தேதி நடத்த, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

News March 19, 2025

இஸ்ரோவில் கரையோஜனிக் என்ஜின் சோதனை வெற்றி

image

நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரனின் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு விண்கலத்தை செலுத்தி ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் பொருத்தக்கூடிய இந்த கிரயோஜனிக் என்ஜின் சோதனை திட்டமிட்டபடி 100 வினாடிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

கிராம சபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

உலக தண்ணீர் தினமான வரும் 23ம் தேதி அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராமசபா கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். திருச்சி மக்களே இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 19, 2025

மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு தொழில் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் <>தாட்கோ<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!