India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மதுக்கரை நாச்சிபாளையம் பகுதியில் இன்று காலை பெண்ணின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து விரைந்து சென்ற மதுக்கரை போலீசார் சடலத்தை மீட்டு கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும், விசாரித்ததில் இறந்தவர் வழுக்குப்பாறை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரியும் பத்மா என்பது தெரிந்தது. தொடர்ந்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 19) 28.55அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.10 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 50 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 20 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலம் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு நாட்டுப்புற கலைகள், செவிலியக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா 8 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்கேற்க விரும்பும் தூத்துக்குடி கலைஞர்கள் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன்- ஆதிரா தம்பதி தங்களது காரில் திருப்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த கும்பல், தம்பதியைக் கொடூரமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கணவர் ஜான் உயிரிழந்தார். மனைவி ஆதிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்காசியை சேர்ந்த முத்துராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கோயில் பணிகள் முழுமை பெறாமல் ஏப்ரல் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும் கூறியிருந்தார். இதனை நேற்று விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த 4 ஆண்டு காலம் 900 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது 1110 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலம் வரையில் இந்த தண்ணீர் போதுமானதாக இருக்கும் என கே என் நேரு தெரிவித்துள்ளார், சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் காரபாக்கம் கணபதி கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்
சென்னை மாநகராட்சி (2025-26) நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவா் சா்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார், மாநகராட்சியில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறித்து மேயர் பிரியா அறிவித்தார். இதில் கல்வி, சுகாதாரம், மழைநீர்வடிகால் துறை, பூங்கா உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ளிட்ட திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. (மார்ச்.19) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக்குழுக்கள் தேர்வு சேலம் மாவட்டத்தில் வரும் 22, 23-ந் தேதிகளில் நடக்கிறது. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் www.artandculture.tn.gov.in மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ரோஸாங்லா ரியாங் (27) என்பவர் கடந்த மாதம் ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டு தமிழகத்திற்கு வந்தார். இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்தவரை பிடிக்க திரிபுரா போலீசார் திண்டுக்கல் போலீசாரிடம் உதவி கோரினர்.இதையடுத்து, ரியாங்கின் அலைபேசி எண்ணை வைத்து நேற்று(மே 18) மதியம் 3:00 மணிக்கு அவரை கைது செய்த திண்டுக்கல் போலீசார் திரிபுரா போலீசிடம் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.