Tamilnadu

News September 6, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 6, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

காவல் துறை சார்பில் இன்று (05.09.2025) இரவு ரோந்து :

image

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (05.09.2025) இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர், காட்பாடி, சாயர்பேட்டை, அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு ரோந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.

News September 6, 2025

வேலூர் காவலர் தினத்தை முன்னிட்டு எஸ்பி தகவல்

image

காவலர் தினத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 06) வேலூர் காவலர் கவாத்து மைதானத்தில் காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், தொடர்ந்து காலை 10 மணியளவில் காவலர் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் சிஎம்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாமும் மாலை 5 மணியளவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

image

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார். இவர் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர். 1967ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000க் கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 5,000க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களை இவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 5, 2025

அறிஞர் அண்ணா கல்லூரி: தேசிய அளவில் சாதனை

image

தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை NIRF வெளியிட்டுள்ளது. இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, 154-வது இடத்தைப் பிடித்துத் தமிழகத்திற்கும், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. மேலும், வேலூர் மண்டலத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் இக்கல்லூரி முதலிடம் வகிக்கிறது.

News September 5, 2025

தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப். 05) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News September 5, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 5, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

விருதுநகர்: ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

image

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnuwwb.tn.gov.in மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!