India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ஈச்சனேரி கிராமத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் உடல் நேற்று தீயில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பெருங்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மலையரசன் என்பதும்,தனிப்படை காவலராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து பெருங்குடி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் சிவப்பு அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று இன்று மஞ்சள் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், மண்டலம் 1,2,3, 4, 5, 7, 8, 11, 13 மற்றும் 14 ஆகிய பத்து மண்டலங்களில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாடு மையங்களில் கூடுதலாக வளர்ப்புப் பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. வளர்ப்பு பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை வழங்க ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்தாண்டு 4464 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது, அந்த தொகை தற்போது 5145 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 681 கோடி ரூபாய் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு உயர்வு. கடந்தாண்டு 262 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 68 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வருவாய் துறையில் புதிதாக வரி செலுத்துபவர்களுக்கு QR code வசதி ஏற்படுத்தப்படும். சொத்துவரி மதிப்பீடு, பெயர் மாற்றம், திருத்தத்திற்கான இறுதி அறிவிப்புகள், புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமை, மக்கள் வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி செய்யப்படும். இதனால் எவ்வித சிரமம் இன்று உடனடியாக வரிகளை செலுத்த இயலும்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெருநாய் கடியால் மக்கள் அவதி பெரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று பாராளுமன்ற ரயில்வே விவாதம் கூட்டத்தில் பங்கேற்ற ஈரோடு பாராளுமன்ற எம் பி கே இ பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். அதில் ஈரோடு ரயில் நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்க வேண்டும், ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அதிகரிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அயயா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள நாடார் சமூக மக்களிடம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வைகுண்ட சாமி தர்மபரிபாலன அமைப்பு தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான பிரதிநிதிகள் கேரள முதலமைச்சரை சந்தித்தபோது இதை அவர் கூறியதாக தகவல்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன்- ஆதிரா தம்பதி தங்களது காரில் திருப்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த கும்பல், தம்பதியைக் கொடூரமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கணவர் ஜான் உயிரிழந்தார். மனைவி ஆதிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.