Tamilnadu

News March 20, 2025

அடக்கம் செய்த போலீஸ்: கணவரை தேடிவந்த மனைவி

image

ஜோலார்பேட்டை அருகே உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் உடல் அடையாளம் தெரியாததால் போலீசார் கடந்த மார்.17ஆம் தேதி அடக்கம் செய்தனர். இதற்கிடையே, அடக்கம் செய்தவரின் மனைவி கணவரை தேடி நேற்று (மார்.19) வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 10 நாட்களாக விசாரணை நடத்தி வந்தபோது, உடலை கைப்பற்ற யாரும் வராததால் போலீசார் அடக்கம் செய்தனர். ஆனால், அடக்கம் செய்த மறுநாளே அவரது மனைவி வந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 20, 2025

சிவகாசி மக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

image

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து குடிநீா் பிடித்தால், குடிநீரைத் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி எச்சரித்துள்ளார். மாநகராட்சியில் மொத்தம் 38,630 குடிநீா் இணைப்புகள் உள்ள நிலையில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து தண்ணீா் பிடிப்பது கண்டறியப்பட்டால்,சம்பந்தப்பட்ட குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை.

News March 20, 2025

திருடு போன ஆட்டோ ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்

image

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாகர்ஷா தெருவை சேர்ந்தவர் முகமது யாசீர்(32). இவர் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் துரிதமாக செயல்பட்ட  போலீசார், ஒருமணி நேரத்தில் ஆட்டோவை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை, காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

News March 20, 2025

டிராக்டர் மீது கார் மோதியதில் தொழிலதிபர் பலி  

image

சென்னை-பெங்களூர் நெடுசாலையில் நேற்று சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதியதில் காரில் பயணித்த சேலம் பகுதியை சேர்ந்த முஹம்மத் யாகூப் (தொழிலதிபர்), முஹம்மத் யூசுப், சாலையோரம் நின்று கொண்டிருந்த ரேஷ்மா அவரது 2 வயது குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முஹம்மத் யாகூப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 20, 2025

இன்டர்வியூக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் விபத்தில் பலி

image

வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூபதி (29). நேற்று (மார்.19) காலை பைக்கில் எழிச்சூரில் உள்ள தொழிற்சாலைக்கு இன்டர்வியூக்கு சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு திருப்பினார். எழிச்சூர் – பண்ருட்டி கண்டிகை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றோரு பைக் பலமாக மோதியது. இதில் பூபதி உயிரிழந்தார். மற்றோரு பைக்கில் வந்த ராமலிங்கத்திற்கு 2 கால்கள், வலது கை முறிந்தது.

News March 20, 2025

கோவை: பிரபல பாம்பு பிடி வீரர் மரணம்!

image

கோவையில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் சந்தோஷ். இவர் சமீபத்தில் பாம்பு பிடிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக, சந்தோஷை நாகப்பாம்பு கடித்தது. பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாம்பு பிடி வீரர் சந்தோஷ் பரிதாபமாக நேற்றிரவு உயிரிழந்தார். தமிழக அரசு இவரது குடும்பத்திற்கு உதவ வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 20, 2025

மனைவியை கட்டையால் அடித்த கணவர் கைது

image

சங்கராபுரம் அடுத்த கல்லிப்பட்டை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி மகாலட்சுமி(36). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மகாலட்சுமி, அவரது உறவினருடன் சங்கராபுரம் சென்றார். அங்கு எதிர்பாராவிதமாக முரளியை சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கட்டையால் மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் முரளியை கைது செய்தனர்.

News March 20, 2025

மார்பில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் வீரமரணம்

image

செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜீவகன் ஓய்வு பெற்ற போலீஸ். இவரது மகன் வினோத்குமார் (49) காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 18ம் தேதி மாலை 3.49 மணியளவில் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் இவரின் வலது மார்பு அருகே தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வீரமரணம் அடைந்தார்.

News March 20, 2025

சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

சேலத்தில் நாளை (மார்ச் 21) தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ,பட்டப்படிப்பு, பொறியியல்,செவிலியர், போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 20, 2025

பற்றியெரிந்த வீடு, மூதாட்டி பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டகுறுக்கி கிராமத்தில் நேற்று, திருப்பதிநாயுடு மனைவி நாகம்மாள்(75) என்பவரது ஓட்டு வீடு முழுவதும் தீப்பற்றியது. அதில் நாகம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். VAO முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!