Tamilnadu

News March 20, 2025

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்பனை

image

சென்னையில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான ரூ.1,700 மதிப்பிலான டிக்கெட் ரூ.8,000 வரையிலும், ரூ.3,500 டிக்கெட் ரூ.18,000க்கும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை 1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. இதனால், பலரும் டிக்கெட்டுகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

News March 20, 2025

புத்தக திருவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்லும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 வது புத்தகக் கண்காட்சி நாளை முதல் மார்ச் 30 வரை ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கவுள்ளது. காலை 10 முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். *ஷேர் பண்ணுங்க 

News March 20, 2025

அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். பொருள்களின் சோதிக்கும் மத்திய தர நிர்ணய அதிகாரிகள் இன்று திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில், கொடுவள்ளி பகுதிகளில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.

News March 20, 2025

குமரி அனந்தன் பிறந்தநாளை கொண்டாடிய தமிழிசை!

image

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் தனது 93வது பிறந்த நாளை நேற்று(மார்ச் 19) கொண்டாடினார். உடல் நலம் சரியில்லாமல் சென்னையில் மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மகளும் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று அவரை சந்தித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

News March 20, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 20) நீர்மட்டம்: வைகை அணை: 59.32 (71) அடி, வரத்து: 150 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 113.40 (142) அடி, வரத்து: 221 க.அடி, திறப்பு: 311 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 69.37 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 33.50 (52.55) அடி, வரத்து: 5 க.அடி, திறப்பு: இல்லை.

News March 20, 2025

சிவகங்கை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – 17,934 பேர் பங்கேற்பு

image

சிவகங்கை, 131 அரசுப்பள்ளிகள், 34 அரசு உதவி பெறும் பள்ளிகள், 74 தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 278 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 30 மாணவர்கள், 8 ஆயிரத்து 904 மாணவிகள் என மொத்தம் 17ஆயிரத்து 934 பேர் எழுதுகின்றனர். 105  தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. 250 பேர் தனித்தேர்வர்களாக தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். கண்காணிப்பில் 105 முதன்மை கண்காணிப்பாளர்கள் 105 துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

News March 20, 2025

10th Exam: கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஒதுக்கீடு

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதனை ஒட்டி தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியிடங்கள் குலுக்கல் முறையில் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கிரிஸ்டல் ஜாய் லெட் தலைமையில் இது நடைபெற்றது. பொதுத்தேர்வு தொடர்பான அறிவுரைகளை முறையாக கண்காணிப்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

News March 20, 2025

பழனியாண்டவர் பாலிடெக்னிக் வேலை; நாளை கடைசி நாள்

image

பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்காலம் சம்பளமாக ரூ.15,700 முதல் 58,500 வரை வழங்கப்படும். நாளை கடைசி நாளாகும். <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதை ஷேர் செய்யுங்கள்.

News March 20, 2025

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

image

சென்னை அண்ணா சாலையில் சென்ற பேருந்தில், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ஆடையை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணி வியாபாரி சையது அப்துல் ரகுமான் என்பவரை, மாணவி காலணியால் அடித்து போலீசிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், சையது அப்துல் ரகுமான் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

News March 20, 2025

கிராம வாரியாக குழு ஏற்படுத்தி கண்காணிப்பு

image

கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா நேற்று கூறுகையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2024ல் 37 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 97 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்குட்பட்ட கிராம வாரியாக குழு ஏற்படுத்தி, குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.

error: Content is protected !!