India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடித்து விழமங்களத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் சங்கர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று 14 வயது சிறுவன் அவர் கடைக்கு மளிகை பொருள் வாங்க சென்றான். அந்த சிறுவனை அந்த மளிகை கடைக்காரர் உள்ளே அழைத்துக் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் மளிகை கடைக்காரரை போக்சோவின் கீழ் கைது செய்தனர்.
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாபெரும் மிதிவண்டி போட்டி வருகிற மார்ச் 23ஆம் தேதி ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 14 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.முதல் பரிசு ரூ. 5000 வழங்கப்பட உள்ளது.30 கி.மீ சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <
தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை பெய்கிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அடுத்த நான்கு தினங்களுக்கு கோடை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பணியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும் தொடர்ச்சியாக உள்ளது. இன்று முனஞ்சிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர் ஒருவர் படியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டார். நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரிமாவட்டத்தில் கோடை மழை பல்வேறு பகுதிகளில் பெய்துள்ளது. அதிகபட்சமாக பேச்சிப் பாறை பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பத்மநாபபுரம் 12, பரளி ஆறு 10, தும்புக்கோடு 10, சிற்றாறு ஒன்று 9, மைலார் 8, திற்பரப்பு 6, சிவலோகம் 5, தடிக்காரன் கோணம் 4, சிற்றாறு இரண்டு 3, குழித்துறை டவுன் 2, தக்கலை 2, பாலமோர் 2, மாம்பழத்துறையாறு அணை 2, மணலோடை 2, கல்லார் 2, அருமனை 2 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர் அருகே புதுபத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நடராஜன் (57) என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கின் விசாரணை திருவாரூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000/- அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று வருமான வரி சேவை மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் வருமான வரி தலைமை ஆணையர் வசந்தன் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கோடி வருமானவரி மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது என்றும், இதில் தமிழகத்தின் பங்கு 6.2%. குமரி மாவட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருகிறது என்று தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (19.03.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகளையும், அங்கு பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், வணிக வளாகங்களுடன் கூடிய ஆற்காடு தினசரி சந்தை கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்டார உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இராஜபாளையம் 97863-36396, 76959-53836 சிவகாசி 90425-19911 ,94420-58126 விருதுநகர் 98434-81831 ,97151-09134 என்ற உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதன்மை நிர்வாக அலுவலர், செயலாட்சியர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.